Breaking
Sun. Mar 16th, 2025

கடந்த பிரதேச சபை தேர்தலில் கோறளை பற்று மேற்கு பிரதேச சபையில் ஐக்கிய தேசிய முன்னனியின் பங்காளி கட்சியான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பான இரண்டு போனஸ் ஆசனங்கள் கிடைக்கப் பெற்றிருந்தது. குறிப்பாக பெண்களுக்கே வழங்கப்பட வேண்டி இருந்த இவ் ஆசனங்களை சுழற்சி முறையில் வழங்குவதற்கு கட்சி தீர்மானித்ததுடன் சமூகம் சார் பணிகளில் அர்ப்பணித்து செயற்படும் கெளரவ முன்னால் உறுப்பினர் பாயிஷா நவ்பல் அவர்களை தனது தெரிவில் கட்சி முன்னிலைப்படுத்தியது.

அதற்காக கெளரவ முன்னாள் உறுப்பினர் பாயிஷா நவ்பல் அவர்கள் அர்ப்பணிப்புடனான சேவையை மக்களுக்கு ஆற்றியது மட்டுமல்லாது தனது தலைமைத்துவத்திற்கு கட்டுபடுகின்ற உயர் பண்பினை தனது பதவிக்கால முடிவில் உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்ததன் மூலம் நிரூபித்துள்ளார்.

இதற்காக கெளரவ முன்னாள் உறுப்பினருக்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கல்குடா கிளை தனது நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறது.

Related Post