Breaking
Tue. Jan 7th, 2025
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் திருகோணமலை மாவட்ட இளைஞர் மாநாடு எதிர் வரும் வியாழக் கிழமை (2019.10.24) அன்று கிண்ணியா நகர சபை மைதானத்தில் மாலை 3.00 மணிக்கு இடம் பெறவுள்ளதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் திருகோணமலை மாவட்ட இளைஞர் அமைப்பாளரும் துறை முகங்கள் மற்றும் கப்பற் துறை பிரதியமைச்சரின் பிரத்தியேகச் செயலாளருமான டாக்டர் ஹில்மி முகைதீன் பாவா தெரிவித்தார்.
கட்சியின் திருகோணமலை மாவட்ட இளைஞர் அமைப்பாளர் டாக்டர் ஹில்மி முகைதீன் பாவா தலைமையில் இடம் பெறவுள்ள இம் மாநாட்டில் திருகோணமலை மாவட்டத்தை உள்ளடக்கிய பல ஆயிரக்கணக்கான இளைஞர் யுவதிகள் பங்கேற்கவுள்ளார்கள்.
இதில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் அமைச்சருமான றிசாத் பதியுதீன்,கட்சியின் தேசிய அமைப்பாளரும் பிரதியமைச்சருமான அப்துல்லா மஃறூப் ,கட்சியின் உயர்பீட உறுப்பினர்கள்,உள்ளூராட்சிமன்ற உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொள்ளவுள்ளார்கள்..

Related Post