Breaking
Tue. Jan 7th, 2025

இராஜகிரிய பிரதேசத்தில் அமைச்சர் பாட்டலி சம்பிக்கவின் வாகனத்தில் இளைஞர்ஒருவர் மோதி காயமடைந்த சம்பவத்தில் பதிவான சீ.சீ.டி.வி காணொளிகளையும், 5இறுவட்டுக்களையும் பரிசோதனையின் பொருட்டு மொரட்டுவ பல்கலைக்கழகத்திற்குஅனுப்புமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த உத்தரவை கொழும்பு நீதிமன்ற நீதவான் சந்தன கலங்சூரிய இன்றைய தினம்விடுத்துள்ளார்.

இந்த பரிசோதனையின் அறிக்கைகள் மொரட்டுவ பல்கலைக்கழகத்தினால் வழங்கப்பட்டபின்னர் அமைச்சர் சம்பிக்கவை கைது செய்வதா?இல்லையா? என நீதிமன்றம் முடிவுஎடுக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் குறித்த விபத்துடன் தொடர்புடைய ஜீப் வண்டியினை சோதனை செய்த போது அதில்கையடக்கத் தொலைபேசி ஒன்று காணப்பட்டதாகவும், அது அமைச்சர் சம்பிக்கவின் பெயரில்பதிவு செய்யப்பட்டிருந்ததாகவும் பொலிஸார் இன்றைய தினம் நீதிமன்றின்கவனத்திற்கு கொண்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன் இந்த வழக்கு மீதான விசாரணை ஜுன் மாதம் 15ம் திகதிக்கு ஒத்திவைப்பதாகநீதவான் அறிவித்துள்ளார்.

By

Related Post