Breaking
Tue. Jan 7th, 2025

-முர்ஷிட் கல்குடா-

கிராமிய பொருளாதார அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் மூலம், ஆரையம்பதி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள தொழில் முயற்சியாளர்களுக்கு வாழ்வாதார உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு ஆரையம்பதி பிரதேச செயலகக் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

 

ஆரையம்பதி பிரதேச செயலாளர் திருமதி.எஸ்.சத்தியானந்தி தலைமையில் நடைபெற்ற இந்தநிகழ்வில், பிரதம அதிதியாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தவிசாளரும்,  கிராமிய பொருளாதார பிரதியமைச்சருமான எம்.எஸ்.எஸ்.அமீர் அலி கலந்துகொண்டார். அதிதிகளாக பிரதியமைச்சரின் இணைப்பாளர் டி.லோகநாதன், எஸ்.ஜெகநாதன், திருமதி.ஜெ.மீனா, எஸ்.கைலாசபதி, பிரதேச செலயக உத்தியோகத்தர்கள் மற்றும் பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.

இதன்போது ஆரையம்பதி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள சிறிய தொழில் முயற்சியாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில், கிராமிய பொருளாதார அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில் ஏழு இலட்சம் ரூபாய் பெறுமதியான வாழ்வாதார உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.
அந்த வகையில் ஓடாவி உபகரணம், மேசன் உபகரணம் உள்ளிட்ட பல உபகரணங்கள் 115 பேருக்கு வழங்கி வைக்கப்பட்டது.

 

 

Related Post