அ.இ.ம.கா. தேசியத் தலைவரும் , கைத்தொழில் வர்த்தக அமைச்சருமான கௌரவ ரிசாட் பதியுதீன் அவர்களின் நிதி ஒதுக்கீட்டில் ஆலையடிவேம்பு, கோளாவில் – 02 பிரதேசத்தில் தையல் பயிற்சி நிலையம் ஒன்று (20. MAY. 2017) திறந்து வைக்கப் பட்டது.
காமோதரம் ஜெயாகர் (ஜெயா மாஸ்டர்) அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் அவர் “ நாடு சுதந்திரமடைந்த காலத்திலிருந்து எங்கள் பிரதேசத்தில் அமைக்கப்பட்ட முதலாவது தொழிற்சாலை இதுவாகும்” என்று என்னிடம் தெரிவித்தார்.
அத்துடன் கௌரவ தேசியத் தலைவர் ரிசாட் பதியுதீன் அவர்களுக்கு நானும் எங்கள் மக்களும் என்றென்றும் நன்றிக்கடன் பட்டிருக்கின்றோம் என்றும் தெரிவித்தார்.
பல மில்லியன் பெறுமதியான தையல் இயந்திரங்கள் மற்றும் அதனுடன் தொடர்புடைய மேலும் பல இயந்திரங்களும் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டதுடன், இந்த பயிற்சி நிலையம் ஊடாக முதற்கட்டமாக 23 வறிய குடும்பங்களின் இளைஞர் யுவதிகள் பயனடயவுள்ள இதேவேளை
இது தொடர்ந்தும் இயங்கும் அத்துடன் பயனாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து செல்லும் என்றும் அ.இ.ம.கா இன் பிரதித் தலைவரும், கிராமிய பொருளாதார பிரதியமைச்சருமான நிகழ்வின் பிரதம அதிதியுமான கௌரவ அமீர் அலி அவர்கள் மேலும் தெரிவித்தார்.
அத்துடன் அ.இ.ம.கா இன் செயலாளர் நாயகம் அல்-ஹாஜ் சுபைர்டீன் அவர்களும் கௌரவ அதிதியாக கலந்துகொண்டு இந்தக் கட்சியின் இன , மத, சாதி பேதமில்லாத கொள்கைகளைப் பற்றி மக்கள் மத்தியில் சிறப்பாக எடுத்துரைத்தார்.
அத்துடன் சிறப்ப்பு அதிதிகளாக கலந்து சிறப்பித்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் (KAHATAGAHA GRAPHITE LANKA LIMITED) நிறுவனத்தின் தலைவருமான அல்-ஹாஜ் எம். அப்துல் மஜீத் (S.S.P. மஜீத்) அவர்களும்
மற்றும் அக்கரைப்பற்று பிரதேச அமைச்சசின் இணைப்பாளுமான எம்.என்.எம். நபீல் அவர்களும் கலந்துகொண்டு தங்களது கருத்துக்களை முன்வைத்தனர்.
20. MAY. 2017 நேற்று சனிக்கிழமை பிற்பகல் நடைபெற்ற இந்நிகழ்வில் பெருந்திரளான மக்கள் கலந்துகொண்டதுடன் பிரதியமைச்சர் மற்றும் அனைத்து ஏனைய அதிதிகள் முன்னிலையில் மக்கள் தங்களது திறமைகளை எடுத்துக்காட்டும் வகையில் எந்தவொரு இயந்திர உபகரணமும் இல்லாமல் வெற்றுக் கைகளால் களி மண்ணை பிசைந்து வெறும் ஐந்தே நிமிடத்திற்குள் பல மட்பாண்டப் பொருட்களை செய்தும் காட்டினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இவ்வாறான திறமைசாலிகளுக்கு அடுத்தடுத்த கட்டமாக பயனாளிகளாக இணைத்துக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என்பதில் ஐயமில்லை.