Breaking
Fri. Jan 3rd, 2025

அதிமேதகு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மஹிந்த சிந்தனை தொலைநோக்கு என்ற கொள்கையின் கீழ், எமது அரசாங்கம் எதிர்வரும் ஆண்டுகளில் றப்பர் தொழில் துறை மூலம் மூன்று பில்லியன் அமெரிக்க டொலரை ஈட்டிக்ககொள்வதற்கான ஒர் இலட்சியத்தில் உள்ளது.
ஒரு சாத்தியமான முறையில் மூன்று பில்லியன் அமெரிக்க டொலரை ஈட்டிக்ககொள்வதெனில் எமது சிறிய றப்பர் தொழில் சார் விவசாயிகளுக்கு ஆதரவு வழங்கப்படுதல் அவசியமாகும்.

இலங்கையில் முதல் முறையாக அக்டோபர் மாதம் நடைபெறவுள்ள உலக றப்பர் மாநாட்டின்; அங்குரார்பண நிகழ்வில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையிலேயே கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட்; பதியுதீன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேற்படி நேற்று (28) வியாழக்கிழமை சினமன் கிராண்;ட் ஹோட்டலில் நடைபெற்ற இந்நிகழ்வில் பெருந்தோட்ட கைத்தொழில் பிரதி அமைச்சர் கௌரவ குணசேகர, ஏற்றுமதி அபிவிருத்தி சபை தலைவரும் தலைமை நிர்வாக அதிகாரி திரு பந்துல எகொடகே,; மலேஷியா ‘ஊழகெநஒhரடி’ சர்வதேச நிகழ்ச்சி அமைப்பின் தலைவர் டாக்டர் அப்துல் அஸீPஸ், றப்பர் தொழில்துறை பங்குதாரர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் அரசு அதிகாரிகள் விசேட அதிதிகள் என பலர் கலந்துக்கொண்டனர்.
வரலாற்று ரீதியான இந்த சர்வதேச நிகழ்வினை கொழும்பில் நடத்த மலேஷியாவை தளமாக கொண்ட சர்வதேச நிகழ்ச்சி அமைப்பாளர்களான ‘ஊழகெநஒhரடி’ யினருடன் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சின் கீழ் இயங்கும் ஏற்றுமதி அபிவிருத்தி சபையினர் ஓர் இணை அமைப்பாளராக கூட்டிணைந்து ஒழுங்கு செய்துள்ளனர்.

இவ் அங்குரார்பண நிகழ்வில் அமைச்சர் ரிஷாட்; பதியுதீன் தொடர்ந்து உரையாற்றுகையில்:
இலங்கையில் முதல் முறையாக நடைபெறவுள்ள உலக றப்பர் மாநாட்டின் நிகழ்வினை இங்கு அறிவிப்பதில் நான்; மகிழ்ச்சியடைகின்றேன.; அதே போல் எந்தவொரு சர்வதேச நிகழ்வுகளும் உலக றப்பர் தொழில் துறைக்கு தளம் அமைப்பதற்கு தவறிவிடவில்லை என்ற அறியப்பட்டவிடயத்தினை நான் நன்கு புரிந்து கொண்டுள்ளேன்.
மேலும் முக்கியமாக, வரலாற்றில் உலகிற்கே இயற்கை றப்பர் வழங்குனராக இலங்கை திகழ்வது என்பது இலங்கைக்கு ஒரு மரியாதை ஆகும்.

உலகின் மொத்த றப்பர் விநியோகத்தில் இயற்கை றப்பர் உருவாக்கம் மூன்றில் ஒரு பங்காக இருப்பது நாம் அறிந்த விடயமாகும்
இலங்கை போன்ற ஒரு நாட்டில் இத்துறையில் வேலைவாய்ப்பு விகிதங்கள் கணிசமாக இருப்பது பெரும் முக்கியத்துவம் வாய்ந்ததொன்றாகும.;
அதிமேதகு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மஹிந்த சிந்தனை தொலைநோக்கு என்ற கொள்கையின் கீழ், எமது அரசாங்கம் எதிர்வரும் ஆண்டுகளில் றப்பர் தொழில் துறை மூலம் மூன்று பில்லியன் அமெரிக்க டொலரை ஈட்டிக்ககொள்வதற்கான ஒர் இலட்சியத்தில் உள்ளது.
ஒரு சாத்தியமான முறையில் மூன்று பில்லியன் அமெரிக்க டொலரை ஈட்டிக்ககொள்வதெனில் எமது சிறிய றப்பர் தொழில் சார் விவசாயிகளுக்கு ஆதரவு வழங்கப்படுதல் அவசியமாகும். இலங்கையில் இத்தகைய சிறிய விவசாயிகளினால் மொத்தமாக 65 சதவீதமான றப்பர்பயிர் சொந்தமாக நாட்டப்பட்டுள்ளதாக நம்பப்படுகிறது.

எனவே இ இலங்கை – நாட்டின் வரலாற்று புகழாக காணப்பட்ட இயற்கை றப்பர்; தவிர இந்த துறையில் அதிகரிக்க சமூக பொருளாதாரமும் ஒரு முக்கியமான காரணமாக இருந்தது.

முக்கிய பாத்திரமாகவுள்ள இலங்கையின் வரலாற்று புகழ்; றப்பர் வழங்கல் சங்கிலியை தக்கவைத்து கொள்ளவதற்கும் றப்பர் தொழில்துறை சிக்கல்களை சமாளிக்கும் பொருட்டும், இத் துறைக்கு நீண்ட கால வளர்ச்சி திட்டத்தை பரிசீலிக்க வேண்டிய நேரம் வந்துள்ளது
மீள்நடு உதவியை அறிமுகப்படுத்த இது பயனுள்ளதாக இருக்கும். றப்பர் ஏற்றுமதி மூலம் அதிக வருமானம் பெற்ற காலங்களில் றப்பர் வரி மூலமான நிதியானது ஒரு தற்காலிகமாகவே இருந்தது.

2013 ஆம் ஆண்டில்; இலங்கை 72 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான இயற்கை றப்பரினையும் 887 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான றப்பர் முடிவு உற்பத்திகளையும் ஏற்றுமதி செய்துள்ளது. 2009 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2013 ஆம் ஆண்டு மொத்த றப்பர் ஏற்றுமதி 100 சதவீத அதிகரிப்பை காட்டியது என்பதை நான் மிகவும் சந்தோஷத்துடன் தெரிவிக்கின்றேன.;

இத்தகைய ஒரு பின்னணியில், கொழும்பில் நடைபெறவுள்ள எதிர்வரும் உலக றப்பர் மாநாடானது எங்கள் றப்பர் தொழில்துறைக்கு அடுத்த கட்டத்திற்கு முன்னேற ஒரு பெரிய வாய்ப்பு இருக்கும் என்று நான் நம்புகிறேன்.
;
இது எங்கள் றப்பர் தொழில்துறைக்கு ஒரு மதிப்புமிக்க உலக வளைப்பின்னலுக்கான வாய்ப்பை வழங்குவதோடு சமீபத்திய தொழில்நுட்பங்கள் மற்றும் முன்னேற்றங்கள் கற்றுக்கொள்ளுவதற்கும் வாய்ப்;பாகவும் உள்ளது.

எனது அமைச்சு 46 ஆயிரம் டொலர்கள் செலவில் இரண்டு முக்கியமான முயற்சிகளை தொடங்கியிருக்கின்றது என்பதை தெரிவிப்பதிலும் நான் மகிழ்ச்சி அடைகிறேன.; இந்த இரண்டு புதிய முயற்சிகளும் முறையே (முதன் முறையாக) றப்பர் தொழில்துறைக்கான தரவுத்தளம் உருவாக்கம் இ தேசிய இறப்பர் ஆராய்ச்சி கணக்கெடுப்பை நடத்துதல் என்பனவாகும.;

தேசிய றப்பர் கணக்கெடுப்பின் எமது முதல் ஆய்வுகள் சுவாரசியமானதாக காணபபட்டது; இதுவரை நாம் சப்ரகமுவ மற்றும் மேற்கு மாகாணங்களுக்hன கணக்கெடுப்பினை மேற்கொண்டுள்ளோம். தற்போது அது நிறைவு பெற்றுள்ளது.
இரண்டு மாகாணங்களிலும் 203 றப்பர் தொழிற்சாலைகள் செயல்படுவதாக எமது அபிவிருத்தி அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். மேல் மாகாணத்தில் 10,000 க்கும் மேற்பட்டோர் றப்பர் தொழில்துறையில் ஈடுபட்டுவருகின்றனர்.அத்துடன் 2013 ஆம் ஆண்டில்; 815 புதிய வேலைவாய்ப்புக்கள் உருவாக்கப்பட்டது.
நிறம் பூசல் இ அச்சு வடிவமைப்பு மற்றும் உற்பத்தி போன்ற ஆதரவு சேவைகளை வழங்குவதற்கு இம் மாகாணங்களில், திறமையான மக்களின்; ஒரு பற்றாக்குறை உள்ளது.
றப்பர் தொழில்துறை மற்றும் றப்பர் உற்பத்தித்துறை என அனைத்து வேலை பிரிவுகளுக்கும் பயிற்சிகள் வழங்கப்படவேண்டும் என்று கண்டறியப்பட்டது.
கொழும்பில் நடைபெறவுள்ள எதிர்வரும் உலக றப்பர் மாநாடு; எங்கள் றப்பர் தொழில்துறைக்கான அடுத்த நிலைக்கு நுழைவதற்கு ஒரு பெரிய வாய்ப்பு காணப்படும் என்று நான் நம்புகிறேன்.
இந்த நிகழ்வு கூட எங்கள் றப்பர் தொழில் துறைக்கு மதிப்புமிக்க உலக வளைப்பின்னலுக்கான வாய்ப்பை வழங்குவதோடு சமீபத்திய தொழில்நுட்பங்கள் மற்றும் முன்னேற்றங்கள் கற்றுக்கொள்ளவதற்கான வாய்ப்பையும் ஏற்படுத்தும் என்று நம்புகின்றேன்.

Related Post