Breaking
Wed. Jan 15th, 2025

பாராளுமன்ற உறுப்பினரும், ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரனின் தாயார் கொழும்பில் காலமாகியுள்ள நிலையில், அவருக்கு மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் மற்றும் தவிசாளரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான எம்.எஸ்.எஸ்.அமீர் அலி ஆகியோர் இறுதி மரியாதை செலுத்தினர்.

தெஹிவளையில் அமைந்துள்ள தனது மகளின் இல்லத்தில் நேற்று (27) சுமந்திரன் எம்.பியின் தாயாரான 85 வயதுடைய புஷ்பராணி மதியாபரணன் காலமானார்.

இந்நிலையில், இன்று (28) மாலை தெஹிவளையில் அமைந்துள்ள சுமந்திரன் எம்.பியின் வீட்டிற்கு விஜயம் செய்த அவர்கள், அவரின் தாயாருக்கு இறுதி மரியாதை செலுத்தினர்.

Related Post