Breaking
Wed. Jan 15th, 2025

புத்தளம், கரைத்தீவு ரிஷாட் பதியுதீன் (அல்-ரிதா) பாலர் பாடசாலையின் விடுகைவிழா, அதன் ஆசிரியை அஸ்மியா தலைமையில், இன்று சனிக்கிழமை (10) பாடசாலை வளாகத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார்.

இந் நிகழ்வில் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் M.T.M. தாஹிர், முன்னாள் புத்தளம் நகர சபையின் பிரதித் தவிசாளர் A.O.அலிகான், முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் தேசபந்து M.I.M.ஆசிக், கட்சியின் கரைத்தீவு அமைப்பாளர் M.T.M.இக்றாம், முன்னாள் வணாத்தவில்லு பிரதேச சபை உறுப்பினர் சுல்தான் மரைக்கார், கட்சியின் கரைத்தீவு இணைப்பாளர் சிபான், முன்பள்ளி வலய இணைப்பாளர் ஜௌசியா, முன்பள்ளி ஆசிரியை ஜிப்ரியா, கவிக்குரல் மன்சூர், கவிஞர் பொற்கேணி முனவ்பர் கான் உட்பட கட்சியின் முக்கியஸ்தர்களும் கலந்துகொண்டனர்.

Related Post