Breaking
Tue. Jan 21st, 2025

வவுனியா, பாவற்குளம் அல் பாத்திமா பாலர் பாடசாலையின் விடுகைவிழா அதன் ஆசிரியை சர்மிலா பளீல் அவர்களின் தலைமையில், இன்று சனிக்கிழமை (10) பாடசாலை வளாகத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு, மாணவர்களுக்கான பாடசாலை உபகரணங்களை வழங்கி வைத்தார்.

இந்நிகழ்வில் முன்பள்ளிகளுக்கான வலய இணைப்பாளர் மனோகரன், மதவாச்சி பிரதேச செயலக உதவி திட்டமிடல் பணிப்பாளர் சஜீத் பாத்திமா றிஸ்னா, அல் மதீனா GTMS பாடசாலையின் பிரதி அதிபர் றமீஸ், வவுனியா அல் அமீன் முஸ்லிம் மகாவித்தியாலயத்தின் ஓய்வுபெற்ற அதிபர் ஜலால்தீன், அல் கரீமிய்யா அரபுக்கல்லூரியின் பிரதி அதிபர் முஜாஹித் முப்தி, பாவற்குளம் பள்ளி பரிபாலனசபைத் தலைவர் றமீஸ், இணைப்பாளர் முத்து முஹம்மது, முன்பள்ளி இணைப்பாளர் லூத் மேரி, இர்சாத் மற்றும் முன்னாள் வவுனியா நகரசபை உறுப்பினர்களான அப்துல் பாரி, லரீப், பாவற்குளம் கிராம சேவையாளர் றம்ஸான், சூடுவெந்தபுலவு கிராம சேவையாளர் அஸ்லம், பாவற்குளம் அபிவிருத்தி உத்தியோகத்தர் நஜீம், பாவற்குளம் சமுர்த்தி உத்தியோகத்தர்களான பரீத், அர்சாத், அருள்நாயகம் உட்பட கிராம அபிவிருத்தி சங்கங்களின் தலைவர்கள், கட்சியின் முக்கியஸ்தர்கள், இளைஞர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

Related Post