இலங்கையில் இருந்து அவுஸ்திரேலியாவுக்கு வரும் அகதிகளின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளதாக அவுஸ்திரேலியா அறிவித்துள்ளது.இலங்கைக்கு வருகை தந்திருந்த அந்த நாட்டின் குடிவரத்துறை அமைச்சர் பீட்டர் டட்டன் இதனை தெரிவித்துள்ளார்.
இலங்கையில் புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர் இலங்கையில் இருந்து தமிழக முகாம்களில் இருந்தும் வரும் அகதிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது.இந்தநிலையில் புதிய அரசாங்கத்தின் வருகை, அவுஸ்திரேலியாவுக்கு மாத்திரம் அல்ல. இலங்கையின் உள்நாட்டிலும் பிரச்சினையை குறைத்துள்ளது என்று டட்டன் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் டட்டன், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜெயவர்த்தன, மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஜோன் அமரதுங்க, மீள்குடியேற்ற அமைச்சர் டி எம் சுவாமிநாதன் ஆகியோரை சந்தித்தார். இதேவேளை 2008- 2013ம் காலப்பகுதியில் அவுஸ்திரேலியாவுக்கு படகுகள் மூலம் வரும் போது 1200 பேர் வரை உயிரிழந்ததாகவும் டட்டன் சுட்டிக்காட்டியுள்ளார்.