Breaking
Wed. Dec 25th, 2024
அகதிகளுக்காக ஒரு தீவையே விலைக்கு வாங்க எகிப்து நாட்டை சேர்ந்த நகுய்ப் சாகுரிஸ் என்ற கோடிஸ்வரர் முன்வந்துள்ளார். தான் வாங்கும் தீவிற்கு பலியான 3 வயது சிறுவன் அய்லானின் பெயரை சூட்ட  நகுய்ப் சாகுரிஸ் தீர்மானித்துள்ளார்.
துருக்கியின் கோஸ் தீவில் கரை ஒதுங்கிய 3 வயது சிறுவன் அய்லானின் சடலமும், அதை போலீஸ்காரர் ஒருவர் கையில் ஏந்திச் சென்ற புகைப்படங்கள் உலகையே கண்ணீர் சிந்த வைத்துள்ளது. இந்த சம்பவத்தையடுத்து பேஸ்புக் மற்றும் சமூக வலைத் தளங்களில் பலர் தங்களது ஆழ்ந்த வருத்தத்தை வெளிப்படுத்தி  வருகின்ற்னர்.
சிரியாவின் உள்நாட்டுப்போர், அந்த நாட்டு மக்களின் வாழ்க்கையை சின்னாபின்னமாக்கி விட்டது. அவர்களில் பலரும் தங்கள் மீதியான வாழ்க்கையை கழித்தே ஆக வேண்டும் என்ற நிர்ப்பந்தமான நிலையில், அண்டை நாடான துருக்கி வழியாக ஐரோப்பிய நாடுகளுக்கு அகதிகளாக சென்று கொண்டிருக்கிறார்கள்.
சிரியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகள் வசமுள்ள கொபானி நகரில் உள்நாட்டுப் போருக்கு பயந்து, உயிர் பிழைப்பதற்காக ஏராளமானோர் கடந்த ஆண்டு துருக்கிக்கு சென்றனர். அங்கிருந்து அவர்கள் படகுகள் மூலமாக பாதுகாப்பற்ற பயணம் மேற்கொண்டு ஐரோப்பிய நாடுகளுக்கு செல்கின்றனர்.
அப்படி துருக்கியில் இருந்து கிரீஸ் நாட்டின் மோஸ் தீவுக்கு 2 படகுகளில் 23 அகதிகள் சென்றனர். ஆனால் அந்த படகுகள், துருக்கியில் பொத்ரும் நகருக்கு அருகே கவிழ்ந்து விட்டன. அவற்றில் 9 பேர் மட்டுமே உயிருடன் மீட்கப்பட்டனர். மற்றவர்கள் நடுக்கடலில் பலியாகினர். பலியானவர்களில் 5 பேர் பச்சிளங்குழந்தைகள்.
அல்லல் படும் அகதிகளுக்காக ஒரு குட்டி தீவையே விலைக்க வாங்க முன் வந்துள்ளார். எகிப்து நாட்டை சேர்ந்த நகுய்ப் சாகுரிஸ் என்ற கோடிஸ்வரர்.
தான் விலைக்கு வாங்கும் அந்த தீவில் அகதிகள் தங்க வீடுகள் மற்றும் வேலை வாய்ப்பை உருவாக்கி தரவும் முடிவு செய்துள்ளார் என்பது கூடுதல் தகவல். இதற்காக கிரீஸ் அல்லது இத்தாலி நாடுகள் தனக்கு ஒரு தீவை விலைக்கு விற்கும்படியும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.அகதிகளுக்காக வாங்கவுள்ள தீவுக்கு பலியான சிரியா சிறுவன் அய்லானின் பெயரை சூட்ட இத்தாலிய கோடீஸ்வரர் நகுய்ப் சாகுரிஸ் தீர்மானித்துள்ளார்.
நகுய்ப் சாகுரிஸ் இது குறித்து டுவிட்டர் பக்கத்த்தில் கூயிருப்பதாவது:
அகதிகளுக்காக நான் வாங்கும் தீவுக்கு சமீபத்தில் அகதியாக புகலிடம் தேடி துருக்கி நாட்டு கடலில் மூழ்கி கரை ஒதுங்கிய சிறுவனின் நினைவாக ‘அய்லான் தீவு’ என பெயரிட முடிவு செய்துள்ளேன்.
அந்த தீவு எங்கே உள்ளது? என்பதை இனிதான் நான் தேட வேண்டும் (“I found a name for the Island ‘ILAN’ [sic] the young Syrian child thrown on Turkish shore by the sea to remind us! Now I need to find the island!”) என டுவிட்டர் பக்கத்தில் நகுய்ப் குறிப்பிட்டுள்ளார்.
எகிப்து நாட்டில் பிரபல தொலைத்தொடர்பு நிறுவன அதிபராக இருக்கும் இவரது சொத்து மதிப்பு சுமார் 300 கோடி அமெரிக்க டாலர்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
அகதிகளாக வந்தேறும் மக்களுக்கு நான் இடம் தருகிறேன், நானும் இடம் தருகிறேன் என ஆஸ்திரேலியா, ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள் போட்டிப் போட்டுக்கொண்டு முன்வந்துள்ளன.

Related Post