விளைவுகளை பற்றி கவலைப்படாமல் நமது திறமைகளை வெளிப்படுத்த வேண்டும் என்று வெடிகுண்டு தயாரித்ததாக தவறுதலாக கைது செய்யப்பட்ட சிறுவன் தெரிவித்துள்ளான்.
அமெரிக்காவை சேர்ந்த அகமத் முகமது என்ற சிறுவன் தான் செய்த கடிகாரத்தை ஆசிரியரிடம் காண்பிப்பதற்காக பள்ளிக்கு எடுத்து சென்றுள்ளான்.
ஆனால் அதை வெடிகுண்டு என்று நினைத்த பள்ளி நிர்வாகம் பொலிசுக்கு தகவல் அளித்தது. இதையடுத்து அந்த சிறுவன் கைது செய்யப்பட்டு பின்னர் உண்மை தெரிந்ததும் விடுவிக்கப்பட்டான்.
இந்நிலையில் அகமத் முகமதுக்கு ஏராளமான மக்கள் தங்கள் ஆதரவை தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையில் இந்த சம்பவம் குறித்து அகமத் முகமது பத்திரிகையாளர்களிடம் கூறியதாவது, என் ஆசிரியரிடம் நல்ல பெயர் வாங்க வேண்டும் என்பதற்காக தான் நான் கடிகாரத்தை உருவாக்கினேன்.
ஆனால் அவர் என்னை தவறுதலாக புரிந்துகொண்டார். இதனால் பொலிசால் கைது செய்யப்பட்டேன்.
தற்போது அந்த பள்ளியில் இருந்து வேறு பள்ளிக்கு இடம் மாறலாம் என்று கருதுகிறேன்.
என்னைபோல் ஆர்வம் உள்ள சிறுவர்களுக்கு உதவி செய்வதற்கு ஆர்வமாய் இருக்கிறேன்.
எப்படிப்பட்ட விளைவுகள் ஏற்பட்டாலும் நமது திறமையை வெளிக்காட்ட தயங்கக்கூடாது என்று தெரிவித்துள்ளார்.