Breaking
Tue. Dec 24th, 2024

-முர்ஷித்-

நடைபெறவுள்ள உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி அறிமுகப்படுத்தும் வேட்பாளரை அதிக வாக்கினை அளித்து வெற்றிபெறச் செய்யுங்கள். அதனூடாக உங்கள் பிரதேசம் அபிவிருத்தி அடையும் என்று மக்கள் காங்கிரஸின் தவிசாளரும், பிரதி அமைச்சருமானஎம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார்.

ஓட்டமாவடி அஸ் ஸலாஹியா முன்பள்ளி பாடசாலையின் 22 வது ஆண்டு நிறைவும், மாணவர் வெளியேற்று நிகழ்வும் நேற்று முன்தினம் (11) வாழைச்சேனை அந்/நூர் தேசிய பாடசாலை மண்டபத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உறையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கூறியதாவது,

உங்களது பிள்ளைகளின் கல்வி அபிவிருத்தியில் உங்களைவிட அதிகம் கனவு காண்பவன் என்ற ரீதியில் சொல்கிறேன், பிரதேசத்தின் கல்வி அபிவிருத்திக்காக நடைபெறவுள்ள தேர்தலில் எங்களுடன் கைகோர்த்து எங்களது வேட்பாளர்களை வெற்றியடையச் செய்வதன் மூலம், பிரதேசத்தின் கல்வி அபிவிருத்தியும் உட்கட்டமைப்பு அபிவிருத்தியும் அதிகம் நடைபெறும்.

நடைபெறவுள்ள உள்ளூராட்சி தேர்தல் வட்டார முறைத் தேர்தல் என்பதால், உங்களது கிராம சேவகர் பிரிவிற்குற்பட்டவர்களுக்கே நீங்கள் வாக்களித்து, உங்களது பிரதிநிதிகளை தெரிவு செய்கின்ற நிலமை உள்ளது, அதனால் உங்கள் பிரதேசத்தில் நன்கு அறிமுகமுள்ள, மக்களுக்கு சேவை செய்யக் கூடியவர்களைத் தெரிவு செய்யுங்கள், தேர்தலுக்கு மாத்திரம் வந்துவிட்டு செல்வதற்கு நாங்கள் வரத்து தண்ணீர் கிடையாது. நாங்கள் கிணற்றுத் தண்ணீர். எப்போதும் உங்களுடன் இருப்பவர்கள். ஆகையால் மக்கள் காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு வாக்களியுங்கள் என்று கூறினார்.

இதன்போது, மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் இடம்பெற்றதுடன், மாணவர்களுக்கான பரிசில்கள் மற்றும்  நினைவுசின்னங்களும் வழங்கி வைக்கப்பட்டது.

அஸ் ஸலாஹியா முன்பள்ளி பாடசாலையின் தலைவர் வை.பி.நாகூர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், மட்டக்களப்பு மத்திய கல்வி வலைய உதவிக் கல்விப் பணிப்பாளர் திருமதி. றிஸ்மியா பானு, பிரதி அமைச்சரின் இணைப்புச் செயலாளர் எஸ்.எம்.தௌபீக் மற்றும் முன்பள்ளி பாடசாலை நிருவாகத்தினரும் கலந்து கொண்டனர்.

 

 

 

 

Related Post