Breaking
Thu. Nov 21st, 2024

பாகிஸ்தான் மக்களிடம் இருந்து இலங்கை மக்களுக்கு கருணை மிக்க ஆட்சி உறுதியான நாடு எனும் அதிமேதகு ஜனாதிபதி அவர்களின் கொள்கை அறிக்கையில் குறிப்பிட்டவாறு அனைவருக்கும் நலம் என்ற எண்ணக்கருவை நனவாக்கி அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் அழைப்பின் பெரில் கொழும்பில் உள்ள பாகிஸ்தான் இஸ்லாமிய குடியரசின் உயர்ஸ்தானிகர் காரியத்தால் நன்கொடையாக வழங்கப்பட்ட இலங்கை சிறுநிரக நோய் தடுப்பு பிரிவுக்கான ஜனாதிபதி செயலகத்தின் ஒத்துழைப்புடன் இலங்கை கடற்படையின் சமுக  சேவை நிகழ்சசி திட்டத்தின் கீழ் பொருத்தப்பட்ட நீர் சுத்திகரிப்பு இயந்திரத்தினை கொழும்பில் உள்ள பாகிஸ்தான் இஸ்லாமிய குடியரசின் உயர்ஸ்தானிகர் காரியத்தில் பதில் கடமையாற்றும் உயர்ஸ்தானிகர் அதிமேதகு கலாநிதி சப்ராஸ் அஹமத் கான் அவர்களுடன் ஜனாதிபதி சிறுநீரக நோய் தடுப்பு செயலகத்தின் உதவி  பணிப்பாளர் அவர்களுடன் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் அனுராதபுர மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரகுமான் இணைந்து கதுலுகம வித்தியாலத்தில்  நேற்று  திறந்து வைத்தார். பாடசாலை அதிபர் டி எம் எஸ் திசாநாயக்க தலைமையில் நடந்த நீர் சுத்திகரிப்பு இயந்திர திறப்பு விழாவில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அனுராதபுர மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரகுமான் உரையாட்டுகையில் அனுராதபுர மாவட்ட மக்களுக்கு பெரும் பிரச்சினையாக இருப்பது சிறுநீரக பிரச்சினை இதனை தடுப்பதற்கு என்னால் முடியுமான எல்லா முயற்சிகளையும் எடுப்பேன் என தெரிவித்தார். மேலும் உரையாட்டுகையில் நான் மக்களுக்கு தேர்தல் மேடையில் வழங்கிய வாக்கு படி எனது பாராளுமன்ற சம்பளத்தை முழுமையாக அனுராதபுர மாவட்ட சிறுநீரக நோயிளால் பாத்திகப்பட்ட மக்களுக்கு வழங்குவதாக தேர்தல் மேடையில் வழங்கிய வாக்கு படி வழங்கி வருகின்றேன் இதனால் அதிகமான மக்கள் பயன் அடைகிறார்கள் இது வரைக்கும் இலங்கையில்  19500  நோயாளிகளை அடையாளம் கண்டுள்ளோம் தினசரி இருவர் வீதம் இறக்கின்றனர் இதில் அனுராதபுர மாவட்டத்தில் மட்டும் 12600 பேர் பாதிக்ப்பு உள்ளாகியுள்ளனர்

சுத்தம்மன குடிநீரை  மட்டும் வைத்துக்கொண்டு சிறுநீரக நோயை தடுக்க முடியாது நாம் உண்ணும் உணவு முழுவதும் விஷம் நிறைந்தவை எதை எடுத்து கொண்டாலும் விஷம் தான் உள்ளது நாம் எமது உணவு பழக்கத்தை மாற்ற வேண்டும் என்று தெரிவித்தார்

Related Post