Breaking
Wed. Nov 20th, 2024

-ஊடகப்பிரிவு-

இன்று 20.04.2017 வெள்ளிக்கிழமை காலை 9.00 மணியளவில் காரைதீவு பிரதேச சபையின் இரண்டாவது அமர்வு இடம்பெற்றது. இதில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மாவடிப்பள்ளி வட்டார உறுப்பினர் எம் ஜலீல் கன்னியுரை நிகழ்தினார்.

இங்கு உரையாற்றிய ஜலீல்

” 1994 ஆம் ஆண்டிற்குப் பிறகு எமதூருக்கு இம் முறையே பிரதேச சபை உறுப்பினர் பிரதிநிதித்துவம் கிடைத்துள்ளது. அதுவும் குறிப்பாக இரண்டு உறுப்பினர்கள் எம் ஊருக்குக் கிடைத்துள்ளது அல்ஹம்துலில்லாஹ்.

எங்களுடைய ஊரின் தேவைகளையும், குறைபாடுகளையும் இச் சபையில் மொழிவதற்கு யாருமிருக்கவில்லை, ஒரு முறை இஸ்மாயீல் அவர்களும், பாயிஸ் அவர்களும் மொழிந்து ஓரிரு அபிவிருத்திகளைச் செய்துள்ளனர். அந்த வகையில் எமது கிராமம் மற்ற கிராமங்களை விட அதிகளவான தேவைகளையும் குறைபாடுகளையும் கொண்டிருக்கிறது. பாதைகள், வடிகான்கள், மின்குமிழ்கள் போன்ற இதர வசதிகள் அபிவிருத்தி செய்யப்பட வேண்டியுள்ளது.

தேர்தல் காலங்களில் எங்களுக்குள் இருந்த மனக்கசப்புகளை மறந்து, எதிர்காலத்தில் நாங்கள் 12 உறுப்பினர்களும், சகோதரர்கள் போன்று எமக்கு வாக்களித்த மக்களுக்கு சேவை செய்கின்ற கடப்பாடு எங்கள் ஒவ்வொருவருக்கும் இருக்கின்றது. மத்திய அரசினால் உட்கட்டமைப்பு அபிவிருத்திக்காக 50 மில்லியன் ரூபா நமது சபைக்கு கிடைக்க இருப்பதாக கூறியிருந்தீர்கள். அதில் மாவடிப்பள்ளியின் வீதி, வடிகான்களையும் குறிப்பாக மத்திய வீதியின் வடிகானமைப்பு குறைபாட்டை நிவர்த்தி செய்யுமாறு முன்மொழிகின்றேன். ஏனெனில் வெள்ளப்பெருக்குகள் ஏற்படுகின்ற போது வடிகானில்லாமையால் 10 ற்கு மேற்பட்ட வீடுகள் தாழ்வுக்குட்படுத்தப்பட்டு பாதிப்படைகின்றது.

அதே போன்று கடற்கரை வீதியில் மின்குமிழ்கள் (போகஸ்ட்) பொருத்துவதாக கூறியிருந்தீர்கள். எங்களது ஊரிலும் தற்போது யானையின் அட்டகாசம் அதிகமாக உள்ளதால் எங்களது ஊரைச் சுற்றி 10 அல்லது 15 மின்குமிழ்களை (போகஸ்ட்) பொருத்தித்தருமாறு வேண்டுகின்றேன். அடுத்து எமது சபையில் மின்திருத்த வேளைகளில் ஈடுபடுபவர்களை கிழமையில் ஒரு நாளைக்கு பூரணமாக எமது ஊரின் மின்திருத்த வேளைகளை செய்ய வேண்டும். அடுத்து எமதூரில் சில வீதிகள் செப்பனிட்டு மீகுதி பகுதி செப்பனிடப்படாமல் பாதிப்படைந்து குறைபாடாக காணப்படுகின்றது. எனவே அக் குறைபாட்டையும் நிவர்த்தி செய்ய வேண்டும்.

எதிர்காலத்தில் எமது கட்சியின் தலைவர் கைத்தொழில் வர்த்தகத்துறை அமைச்சர் அல்ஹாஜ் றிஸாட் பதியுதீன் அவர்களினால் பல அபிவிருத்திகள் கிடைக்கவிருக்கின்றது. அதற்கு நான் சில பிரேரனைகளை கொடுத்திருக்கின்றேன். அவ் அபிவிருத்திகளை காரைதீவுப் பிரதேச சபைக்கு ஊடாக மாவடிப்பள்ளி, மாளிகைக்காடு, காரைதீவு போன்ற மூன்று ஊர்களுக்கும் நான் ஒன்றுபட்டு இன்ஷா அல்லாஹ் செய்யவுள்ளேன்” என்றார்.

அத்துடன் வாக்களித்த ஊர் மக்கள் அனைவருக்கும் நன்றியைக் கூறிக்கொண்டு, மாவடிப்பள்ளியின் அத்தியவசிய தற்கால குறைபாடுகளை நிவர்த்தி செய்ய வேண்டிக் கொண்டார்.

– ஊடகப் பிரிவு –

Related Post