வர்த்தகம் மற்றும் கைத்தொழில் அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தேசியத்தலைவருமான அமைச்சர் றிசாட் பதியுதீன் அவர்களின் எண்ணக்கருவில் அமைந்துள்ள கிராமம் தோறும் விளையாட்டரங்கு என்ற அடிப்படையில் வடக்கில் அமைந்துள்ள பெரும்பாலான விளையாட்டரங்குகளுக்கு மீழ்கட்டுமான நிதி ஒதுக்கீடும் புதிய விளையாட்டரங்குகளுக்குமானதுமான கோடிக்கணக்கான நிதி ஒதுக்கீடுகளை மேற்கொண்டுள்ளார்,
அவ்வாறான நிதி ஒதுக்கீட்டின் ஒரு பகுதியாகவே மன்னார் பியர் கிராமத்திற்கு ஐம்பது இலட்சம் ரூபா நிதியினை ஒதுக்கீடு செய்துள்ளதுடன் அதற்கான கட்டுமான பணிகள் ஆரம்பிப்பதற்கான முதற்கட்ட வேலை இன்று மன்னார் பிரதேச சபைத் தவிசாளரும் அமைச்சரின் இணைப்புச் செயலாளருமான எஸ்.எச்.எம்.முஜாஹிர் தலமையில் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது,
இன்று இடம்பெற்ற அடிக்கல் நாட்டு விழாவில் முன்னாள் வடமாகாண சபை உறுப்பினரும் அமைச்சரின் பிரத்தியேக செயலாளருமான றிப்கான் பதியுதீன் அவர்களும் மீழ்குடியேற்ற செயலணியின் மன்னார் மாவட்ட இணைப்பாளர் முஜீப் அவர்களும், மன்னார் பிரதேச சபை உறுப்பினர்களான டிப்னா ஆசிரியை, செல்ட்டன் ,றாசிக்,புனிதாவதி அவர்களும் அந்தக்கிராமத்தின் பிரதேச சபை உறுப்பினர் நயீம் அவர்களும், பேசாலை பிரதேச இணைப்பாளர் றஹீம் அவர்களும்,தலைமன்னார் பிரதேச இணைப்பாளர் முசம்மில் ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.