Breaking
Mon. Dec 23rd, 2024

அகில இலங்கை மக்கள் காங்கிரசின் வவுனியா மாவட்ட இளைஞர் அமைப்பாளராக  அபூதாஹிர் நபீஸ் என்பவர் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவரும், கைத்தொழில் மற்றும் வணிகத்துறை அமைச்சருமான றிசாட் பதியுதீன் அவர்களால் நியமிக்கப்பட்டுள்ளார்.

 அவருக்கான நியமனக் கடிதத்தை அமைச்சரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் கௌரவ அமைச்சரிடமிருந்து பெற்றுக்கொண்டார். இந்நிகழ்வில் கௌரவ அமைச்சர் உட்பட கிராமியப் பொருனாதார அமைச்சரும் கட்சியின் தவிசாளருமான எஸ்.எஸ்.அமீர்அலி மற்றும் கட்சியின் உயர்மட்ட உறுப்பினர்கள் முன்னிலையில் பெற்றுக்கொண்டார்.

NBC ஊடக வலையமைப்பின் பணிப்பாளரும் North Mass Media கல்லூரியின் நிறைவேற்று இயக்குனரும் அகில இலங்கை சமாதான நீதவானும, ஊடக விரிவுரையாளருமான இவர் கடந்த 13 வருடங்களாக கௌரவ அமைச்சர் அவர்களுடன் அவருடைய வெற்றிக்காகவும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் வெற்றிக்காகவும் அயராது பாடுபட்டவர்களில் ஒருவராகத் திகழ்கின்றார்.

மேலும் அவர் கருத்துத் தெரிவிக்கையில் இன மத பேதமின்றி எந்நேரமும் மக்களுக்காக சேவை செய்யக்கூடிய மக்கள் சேவைக்குத் தன்னை அர்ப்பணித்து செயற்படுகின்ற கௌரவ அமைச்சர் அவர்கள் எந்தெந்த நேரத்தில் எந்தெந்த முடிவுகளை சரியாக எடுக்க வேண்டுமோ அந்தந்த முடிவுகளை சரியான நேரத்தில் எடுத்து கட்சித் தொண்டர்கள் ஏனைய அமைப்புகளில் உள்ளவர்கள் பதவிகளில் நியமிக்கப்படுகிறார்கள். அந்த வகையில் மிக நீண்ட காலமாக கிடைக்கவேண்டிய இந்த அமைப்பாளர் பதவியானது இப்போது எனக்குக் கிடைத்ததையிட்டு மிகவும் மகிழ்ச்சியடைகின்றேன். அதே வேளை கட்சியின் தலைவர் உயர்மட்ட உறுப்பினர்கள் அனைவருக்கும் இநத வேளையில் நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.

அதே வேளை இந்தஇளைஞர் அமைப்பு பதவியானது ஒரு தற்காலிகமான பதவியாகவே நான் கருதுகின்றேன். ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் வவுனியா மாவட்டத்தில் இருக்கின்ற இளைஞர் யுவதிகளை ஒன்றிணைத்து அவர்களுடைய பல்வேறு தேவைகளை அமைச்சினூடாக நிறைவேற்றிக் கொடுப்பதற்கும் இன மத பேதமின்றி நடுநிலையாகவும் செயற்படுவேன் என்றும் தெரிவித்தார்.

Related Post