Breaking
Tue. Dec 24th, 2024

குருநாகல் மாவட்டம் நிகவெரட்டிய தேர்தல் தொகுதியில் அமைந்துள்ள அமீனிய்யா அரபு கல்லூரி அதிபரின் வேண்டுகோளுக்கிணங்க கல்லூரியின் உட்பாதை கொங்ரீட் இட்டு செப்பனிடும் வேலைகள் பூர் தி அடைந்துள்ளது இந்த பாதையை முன்னாள் மாகாண சபை உறுப்பினரும் சதொச பிரதி தலைவரும் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் குருநாகல் மாவட்ட பிரதான அமைப்பாளருமான என்.எம்.நஸீர் திறந்து வைத்தார். அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தேசியத் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் அவர்களின் நிதியொதுக்கீட்டில் இடம்பெற்ற இந் நிகழ்வில் குளியாப்பிடிய பிரதேசசபை உப தவிசாளர் இர்பான், நிகவெரட்டிய தொகுதி அமைப்பாளர் ரஹ்மதுல்லாஹ் ஆசிரியர், குருநாகல் மாவட்ட கட்சியின் கல்வி பொறுப்பாளர் ரியாஸ் (அஸ்ஹரி) குருநாகல் மாவட்ட உலமா காங்கிரஸ் ஸரூக் மௌலவி, கட்சியின் மத்திய குழு உறுப்பினர்கள், கட்சியின் ஆதரவாளர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.

Related Post