Breaking
Tue. Dec 24th, 2024
ஒட்டமாவடி ஹிஜ்ரா வித்தியாலய காணி கொள்வனவிற்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி யின் தேசிய தலைவரும் கைத்தொழில் வர்த்தக மற்றும் மீள்குடியேற்றம் அமைச்சர் றிஷாட்பதியுத்தீன் அவர்களிடம் இராஜாங்க அமைச்சர் அமீர் அலி கேட்டு கொண்டதற்கு இணங்க பாடசாலை  காணிக்கான நிதியினை கையளிக்கும் நிகழ்வு 14.02.2019 அதிபர் திருமதி சைனம்பு தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக விவசாய, நீர்பாசன மற்றும் கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சர் அமீர் அலி கலந்து கொண்டு ரூபா 500000 லட்சம் நிதியை அதிபரிடம் கையளித்தார்.
இந்நிகழ்வில் பிரதேச சபை தவிசாளர் அஸ்மி, உறுப்பினர் அமீர் , மூத்த கல்விமான் காதர் மற்றும் பிரமுகர்களும் கலந்து சிறப்பித்தனர்.

Related Post