அபு அலா
இந்நாட்டு முஸ்லீம்களுக்கு பிரச்சினைகள் ஏற்படும்போது மிக தைரியமாக குரல் கொடுக்கும் துணிச்சல்மிக்க ஒரேயொரு முஸ்லிம் தலைவரும் அமைச்சருமான றிஷாட் பதியுதினை குற்றம் காண்பதன் மூலம் இந்நாட்டு முஸ்லிம்களின் வாழும் உரிமையினை மறுக்க சிலர் முற்படுகின்றனர் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அட்டாளைச்சேனை மத்திய குழு கூட்டத்தில் கண்டன தீர்மானம் எடுக்கப்பட்டது.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அட்டாளைச்சேனை மத்திய குழுக் கூட்டம் அதன் தலைவர் எம்.ஏ.சீ.நஜீப் தலைமையில் நேற்று புதன்கிழமை மாலை (13) அட்டாளைச்சேனை காரியாலயத்தில் இடம்பெற்றபோதே இந்த கண்டனத் தீர்மாணம் எடுக்கப்பட்டது.
மேலும் இத்தீர்மானத்தில்,
1990 ஆம் ஆண்டு பயங்கரவாத இனச்சுத்திகரிப்பின் மூலம் ஒரே நாளில் உடுத்த உடையுடன் வடமாகாண முஸ்லிம் மக்கள் விரட்டியடிக்கப்பட்டனர். 23 வருடங்களின் பின்னர் இம்மக்கள் வடக்கின் வசந்தம் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் மீழ் குடியேற்ற அமைச்சின் ஊடாக சட்ட ரீதியாக குடியேற்றம் செய்யப்பட்டனர்.
இச்செயற்பாட்டினை சகித்துக்கொள்ள முடியாத இனவாதிகளும் குழப்பவாதிகளும் இதனை சட்ட ரீதியற்ற செயற்பாடு என சித்தரித்துக்கொண்டிருக்கின்றனர்.
இவ்வின வெறியர்களின் நிகழ்ச்சி நிரலை அரங்கேற்ற முற்படுபவர்களையும் அவர்களின் ஊது குழலாகச் பெயற்படுகின்றவர்களையும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அட்டாளைச்சேனை மத்திய குழு மிக வன்மையாகக் கண்டிக்கின்றது என்ற தீர்மானத்தை எடுத்தனர்.