அகில இலங்கை மக்கள் காங்ரஸ் தலைவரும், அமைச்சருமான கௌரவ ரிசாத் பதியுத்தீன் அவர்களினால் சம்மாந்துறையில் பல்வேறு அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இதனடிப்படையில்,
01. சம்மாந்துறை பிரதேச சபைக்குட்பட்ட வீரமுனை வட்டாரத்தில் முதலாம் கட்டமாக 3.8 மில்லியன் ரூபாய் செலவில் சகல வசதிகள் கொண்ட பொது நூலகத்துக்கான வேலைத்திட்டம் ஆரம்பிப்பு.
02. அதே போல் 20 வருடங்களுக்கு மேலாக இனங்காணப் படாமல் இருந்த கல்வெட்டுடன் இனைந்த Ampara Road,12B, 1st Crosse Lane பாதை அபிவிருத்தி வேலைத்திட்டங்களும் முன்னெடுப்பு.
03. அதே போல் சம்மாந்துறை மஸ்ஜிதுல் முஅல்லா பள்ளிவாசல் மையவாடியில் வுழுச் செய்து தொழக் கூடியதும், பயான்கள் மேற் கொள்ளக் கூடியதுமான மலசல வசதிகள் கொண்ட திறந்த கட்டிடத்தின் நிர்மானப் பணிகளும் ஆரம்பிப்பு.
04. அதே போல் சம்மாந்துறை அம்பாறை வீதியில் உள்ள ஜமாலியா பள்ளிவாசலுக்கு மேல்தளம் அமைப்பதற்கான வேலைத்திட்டமும் ஆரம்பிக்கப்பட்டு அது முடிவுறும் தருவாயில்
05. மேலும் சம்மாந்துறை மணிக்கூட்டு கோபுர சுற்று வட்டத்தினை அழகு படுத்தும் வேலைத்திட்டமும் முன்னெடுக்கப்பட்டு அதுவும் நிறைவுக்கு வந்துள்ளது.
மேற்படி அபிவிருத்தித் திட்டங்கள் விரைவில் மக்கள் பாவானைக்காக சம்மாந்துறை பிரதேச சபையின் ஊடாக மக்களிடம் கையளிக்கப்படவுள்ளன இவ் வேலைத்திட்டங்களை அகில இலங்கை மக்கள் காங்ரஸ் குழுவினர் நேரில் சென்று பார்வையிட்டனர்.