மாலபே சயிட்டம் தனியார் வைத்திய கல்லூரியை அரச மற்றும் தனியார் கல்லூரியாக நடத்திச் செல்வதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளமை தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்துவதற்கு அகில இலங்கை வைத்திய அதிகாரிகள் சங்கம் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
7 அரச பல்கலைக்கழக வைத்திய பீடங்களின் பீடாதிபதிகள் மற்றும் உயர் கல்வி அமைச்சர் லக்ஷமன் கிரியெல்ல போன்றவர்களுக்கு இடையில் நேற்றைய தினம் இடம்பெற்ற கலந்துரையாடலின் மாலபே சயிட்டம் தனியார் வைத்திய கல்லூரியை அரச மற்றும் தனியார் கல்லூரியாக மாற்ற தீர்மானம் எடுக்கப்பட்டது.
இது தொடர்பாக பீடாதிபதிகள் நேற்றைய தினம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடனும் கலந்துரையாடலில் ஈடுபட்டிருந்தனர்.
இதேவேளை வைத்திய கல்லூரியை அரசு மயப்படுத்தினால், உயர்தரப் பரீட்சையில் பெற்றுக் கொள்ளும் புள்ளிகளின் அடிப்படையில் மாணவர்களை இணைத்துக் கொண்டு இலவசமாக கற்றல் நடவடிக்கைகள் வழங்கப்பட வேண்டும் என்று அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் லஹிரு வீரசேகர கூறியுள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு எழுதியுள்ள கடிதத்தில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது.