Breaking
Fri. Dec 27th, 2024
House on fire at night

அக்கரப்பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்டபட்ட அக்கரப்பத்தனை டொரிங்டன் தோட்ட கல்மதுரை பிரிவின் குடியிருப்பில்  இன்று காலை 7.00 மணியளவில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் தொடர் வீட்டு பகுதியில்  தீ பரவியுள்ளது.

இதனால் அவ்வீட்டில் உபகரணங்கள் மற்றும் பாடசாலை உபகரணங்கள், சீருடை என அனைத்தும் எரிந்து நாசமாகியுள்ள நிலையில் அயலில் உள்ளவர்களால் ஏனைய வீடுகளுக்கு தீ பரவாமல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

அதேவேளை இது தொடர்பாக அக்கரப்பத்தனை பொலிஸ் நிலையத்திற்கு பிரதேசவாசிகளால் தகவல் அளிக்கப்பட்டுள்ளது.

அதன்பின் ஸ்தலத்திற்கு விரைந்த பொலிஸார் தீ பரவலுக்கான காரணங்களை கண்டறிய மேலதிக விசாரணகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனால் பாதிக்கப்பட்ட ஆறு பேரை தற்காலிகமாக தங்க வைப்பதற்கான ஏற்பாடுகளை தோட்ட நிர்வாகம் மேற்கொண்டு வருகின்றன.

By

Related Post