Breaking
Fri. Nov 22nd, 2024
அக்கரைப்பற்று பிரதேசத்தில் காணாமல்போன இளம் குடும்பஸ்தர் ஒருவர் நேற்று இரவு 7 மணியளவில் வெட்டப்பட்டிருந்த நீர் நிரம்பிய குழியொன்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக அக்கரைப்பற்று பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஏ.எல்.எம்.ஜெமீல் தெரிவித்தார்.

அக்கரைப்பற்று -11 ஆம் பரிவு (முறாவோடை) அல்-பாத்திமியா வித்தியாலய வடக்கு வீதியில் வெட்டப்பட்டிருந்த குழியில் இருந்து குறித்த நபர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

மீட்கப்பட்டவர் அக்கரைப்பற்று 14 ,காதிரியா கடற்கரை வீதியைச் சேர்ந்த 30 வயதுடைய ஆதம் லெப்பை ஜஹறுல்லாஹ் என அக்கரைப்பற்று பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

கடந்த செவ்வாய்க்கிழமை நள்ளிரவுக்கு பின் வீட்டிலிருந்து அவரது கை உழவு இயந்திரத்துடன் சென்றவர் மறு நாள் புதன்கிழமை கிழமை வீடு திரும்பவில்லை.

இதனையடுத்து அவரது மனைவி மற்றும் உறவினர்கள் தேடிப்பார்த்தபோது குறித்த நபர் கிடைக்காததையடுத்து, அக்கரைப்பற்று பொலிஸில் வியாழக்கிழமை முறைப்பாடு செய்தனர்.

அன்றைய தினம் நண்பகல் காணாமல் போனவரது கை உழவு இயந்திரம் அக்கரைப்பற்று அல்-பாத்திமியா வித்தியாலய வடக்கு வீதியில் வைத்து கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து கை உழவு இயந்திரம் மீட்கப்பட்ட பிரதேசத்திற்கு அண்மையிலேயே சடலம் நீர் நிரம்பிய குழியில் கிடப்பதாக பொலிசாருக்கு தகவல் கிடைத்ததையடுத்து, பொலிஸார் அவ்விடத்திற்குச் சென்றனர்.

அங்கிருந்து சடலம் மீட்கப்பட்டு அக்கரைப்பற்று நீதிபதியின் உத்தரவுக்கமைய, மரண விசாரணையதிகாரி சம்பவ இடத்துக்கு சென்று விசாரணைகளை  மேற்கொண்டார்.

பின் பிரேத பரிசோதனையின் பின் சடலம் இன்று முற்பகல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

By

Related Post