Breaking
Mon. Jan 13th, 2025

சன சமூக அறிவியல் ஒன்றியத்தின் “அக்கினி அறிவுச் சவால்-2019” நிகழ்வு கடந்த (8) நிந்தவூர் பிரதேச சபையின் கேட்போர் கூடத்தில் ஒன்றியத்தின் தவிசாளரும் ஓய்வுபெற்ற கல்வி அதிகாரியுமான அல்ஹாஜ் ஏ.எல்.எம். அமீன் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.

க.பொ.த. உயர்தர பிரிவில் கணிதம் மற்றும் வணிக பிரிவுகளில் மாவட்ட ரீதியில் 1லாம் நிலையினை பெற்று நமது மண்ணுக்கும் மக்களுக்கும் பெருமை சேர்த்த நிந்தவூர் கல்வி கோட்ட மாணவிகளுக்கு சனசமூக அறிவியல் ஒன்றியத்தினால் தலா ஒரு லட்சம் ரூபாய் பணப்பரிசும் நினைவுச்சின்னமும் வழங்கி கெளரவிக்கப்பட்டது.

முன்மாதிரியான நிகழ்வாக அமைந்த இன்நிகழ்வுக்கு நமது மண்ணின் மற்றுமொரு அடையாளம், ஆளுமை வவுனியா மாவட்ட நீதிபதி ஏ.எம்.எம். றியால் அவர்கள் பிரதம அதிகமாகக் கலந்து சிறப்பித்தார்.

கௌரவ அதிதிகளாக நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளர் எம்.ஏ.எம் தாஹிர், நிந்தவூரில் பிறந்து தமது கடின உழைப்பால் நமது மண்ணுக்கும் மக்களுக்கும் பெருமை சேர்க்கும் கல்விச்சொத்துக்களான கலாநிதி PT. அப்துல் சலாம் அவர்களின் தாயார், கலாநிதி சர்ஜூன் அவர்களின் தந்தையார் மற்றும் கல்முனை கல்விவலைய பணிப்பாளர் எம்.ஐ ஜெலீல் உள்ளிட்ட பல புத்திஜீவிகள், கல்விமான்கள் அழைக்கப்பட்டு கெளவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Post