அல் அக்ஸா பள்ளிவாசல் வளாகத்தில் இடம்பெற்ற மோதலை அடுத்து nஜரூசலம் நகரில் பலஸ்தீனர் ஒருவர் காரை மோதவிட்டு நடத்திய இரண்டாவது தாக்குதலில் மூன்று இஸ்ரேல் படையினர் காயமடைந்துள்ளனர். இதில் ஒருவரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக இஸ்ரேல் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
பலஸ்தீன இலக்க பலகையுடன் மிகப்பெரிய வர்த்தக வாகனம் ஒன்றே மோதிக்கொண்டு தப்பிச் சென்றதாக இஸ்ரேல் பொலிஸ் பேச்சாளர் லூபா சமரி குறிப்பிட்டுள்ளார். கடந்த புதன்கிழமை nஜரூசலத்தில் வாகனத்தை மோதவிட்டு நடத்தப்பட்ட பிறிதொரு தாக்குதலில் இஸ்ரேல் எல்லைப் பொலிஸார் ஒருவர் கொல்லப்பட்டதோடு, 14 பேர் காயமடைந்த நிலையிலேயே ஒரு சில மணிநேரங்கள் கழித்து இரண்டாவது தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
இதில் முதல் தாக்குதலில் காரை மோதவிட்டு நிறுத்தப்பட்ட பின் வாகனத்தில் இருந்து இறங்கிய தாக்குதல் தாரி இரும்புக்கம்பியால் அருகில் இருந்தோரை தாக்க ஆரம்பித்ததாகவும் இதனை அடுத்து அருகில் இருந்த பொலிஸார் அவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும் பொலிஸ் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த தாக்குதலுக்கு காசாவின் இஸ்லாமிய போராட்டக் குழுவான ஹமாஸ் அமைப்பு பொறுப்புக் கோரியுள்ளது. தாக்குதலை நடத்திய இப்ராஹிம் அல் அக்காரி, அல் அக்சா மற்றும் nஜரூசலத்தில் இடம்பெறும் வன்முறைக்கு எதிராக தனது மக்களுக்காக பழி தீர்த்ததாக ஹமாஸ் அமைப்பு வெளியிட்டிருக்கும் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஹமாஸ் ஆயுதப் பிரிவான இஸ் அல் தீன் அல் கஸ்ஸாம் படையணி வெளியிட்ட அறிவிப்பில், “அல் அக்ஸா வெடிக்கவைக்கும் கருவியாகும். அது இஸ்ரேலின் முகத்தில் வெடித்து உமிழும்” என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
nஜரூசலத்தில் இடம்பெற்ற இந்த தாக்குதலை, மோதவிட்டு தப்பியோடும் தீவிரவாத நடவடிக்கை என்று இஸ்ரேல் பொலிஸார் விபரித்துள்ளனர்.
யுதர்கள் அல் அக்ஸா பள்ளிவாசல் வளாகத்தில் வழிபாடு நடத்த உரிமை கோரி வருவது மற்றும் கிழக்கு ஜரூசலத்தில் இஸ்ரேல் தனது குடியேற்ற திட்டங்களை விரிவுபடுத்தும் நிலையிலேயே அங்கு பதற்ற சூழல் ஏற்பட்டுள்ளது.
அல் அக்ஸா பள்ளிவாசல் இருக்கும் பகுதியை யுதர்கள் தமது புனித தலமாக கருதி டெம்பிள் மவுன்டன் என அழைக்கின்றனர். இங்கு தமது தேவாலயம் இருந்ததாக அவர்கள் நம்புகின்றனர். முஸ்லிம்களால் ஹரம் அல் ‘ரீப் என்று அழைக்கப்படும் இந்த பகுதி மக்காஹ் மற்றும் மதீனாவுக்கு பின்னர் புனித தலமாகும்.
இஸ்ரேலியர் அல் அக்ஸா வளாகத்திற்குள் நுழைய முயன்றதை அடுத்து கடந்த புதன்கிழமை இஸ்ரேல் பாதுகாப்பு படையினருக்கும் பலஸ்தீனர்களுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது. இந்த மோதலுக்கு பின்னர் அந்த பகுதியெங்கும் இஸ்ரேல் பாதுகாப்பு படையிர் குவிக்கப்பட்டுள்ளனர்.