Breaking
Tue. Dec 24th, 2024

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் அறிமுகம் மற்றும் கட்சிக் கிளை அமைக்கும் நிகழ்வும் குருநாகல் மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து கிராமங்களிலும் சிறப்பாக இடம்பெற்று வருகின்றது.

அந்த வகையில் பண்டுவஸ்நுவர தேர்தல் தொகுதி அசணாகொடுவ கிராம மக்கள் மற்றும் இளைஞர்களை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்ஸில் இணைத்துக் கொள்ளும் நிகழ்வு கடந்த (17-02-2019) அ.இ.ம.கா குருநாகல் மாவட்டத்தலைவரும் சதொச பிரதி தலைவரும் முன்னால் மாகாணசபை உறுப்பினருமான எம்.என்.நஸீர் (MA) தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் பண்டுவஸ்நுவர தொகுதி அமைப்பாளர் ரியாத் மற்றும் புதிதாக கட்சியில் இணைந்து கொண்டு அசணாகொடுவ கிராம அமைப்பாளரக நியமிக்கப்பட்டுள்ள ஜனாப் ரஸா ஆகியோரின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நிகழ்வில்

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் குளியாப்பிடிய பிரதேசசபை உப தவிசாளர் இர்பான், அ.இ.ம.கா.கல்வி பொருப்பாளர் ரியாஸ் (அஸ்ஹரி), குருநாகல் மாவட்ட கொள்கை பரப்புச் செயலாளர் இம்ரான் கான், குருநாகல் மாவட்ட உலமா காங்கிரஸ் அமைப்பாளர் ஸரூக் மௌலவி , தெல்தெனிய நீதிமன்ற பதிவாளர் ராஸிக், ஊர் இளைஞர்கள், பாடசாலையின் ஆசிரியர்கள், புத்திஜீவிகள், ஊர் மக்கள் என பலரும் கலந்துகொண்டனர்

Related Post