இஸ்ஸதீன் றிழ்வான்
மின்மார் நாட்டின் 969 என்ற இனவாத அமைப்பின் தலைவர் அசின் விராதுவை இலங்கையின் இனவாத அமைப்பான பொதுபல சேனாவின் செயலாளர் கலகொட அத்தே ஞானசாரர் அச்சொட்டாக பின்பற்றுவதை அவரின் நடத்தைகள் படம்பிடித்துக்காட்டுகின்றன.
பெளத்த மதத்தையும் மக்களையும் பாதுகாக்கவென அமைக்கப்பட்ட பொதுபலசேன என்ற அமைப்பு இதுவரைக்கும் பெளத்தர்களூக்கோ அல்லது பெள மதத்திற்கோ இதுவரையும் எதனையும் செய்யவில்லை.
இலைங்கையில் வாழும் தமிழ் முஸ்லிம் மற்றும் கிரிஸ்தவ மக்களுக்கெதிரான சதிகளே தொடர்கின்றன, அதன் வெளிப்பாடே அளுத்கம நகரை தீ மூட்டியதும் மற்றும் பல இனவாத செயற்பாடுகளும்.
கடந்த சில தினங்களாக ஜப்பான் நாட்டுக்கு சென்று வந்ததாகச் சொல்லி குடும்பக்கட்டுப்பாடு தேவை போன்ற புதிய சில கருத்துக்களை வெளியிட்டுள்ளார். இதே செய்தியைத்தான் மியன்மாரில் அசின் விராதும் விதைத்துவருகிறார்.
மொத்தத்தில் 969 எதை செய்கிறதோ அதை இலங்கையில் செய்ய துடிக்கும் ஒரு இன்வாதிதான் இந்த கலகொட அத்தே ஞானசாரர்.
முன்னார் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தொடர்ந்தும் ஜனாதிபதியாக நீடித்திருந்தால் நாம் எந்த கடலில் இன்று தத்தளிக்கின்றோமோ என்ற சந்தேகிக்க தோன்றுகிறது.
அல்லாஹ்வே எல்லாம் அறிந்தவன்