Breaking
Sun. Dec 22nd, 2024
நாட்டில் இன, மத, மொழி வேறுபாடுகள் இன்றி நல்லிணக்கமும் சமூக ஒற்றுமையும் சமாதானமும் ஏற்படுத்தப்பட்டிருப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். அனைத்து சமூகங்களும் சுதந்திரமாக எதுவித அச்சமும் இன்றி வாழக்கூடிய சூழுல் இன்று உருவாக்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி கூறினார்.
சிரீலங்கா சுதந்திர கட்சியின் 65வது ஆண்டு நிறைவை முன்னிட்டு குருணாகல் மாளிகாபிட்டிய மைதானத்தில் நேற்று (4) நடைபெற்ற வருடாந்த கட்சி மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இந்த விடயங்கனை குறிப்பிட்டார்.
அனைத்து சமூகங்களும் சுதந்திரமாக அச்சம் இன்றி
வாழக்கூடிய சூழுல் உருவாக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி தெரிவிப்பு
உள்ளுராட்சி மன்றத் தேர்தல் குறித்து ஜனாதிபதி குறிப்பிடுகையில் எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் சிரீலங்கா சுதந்திர கட்சி கை சின்னத்தில் போட்டியிடும. எம்முடன் இணைந்து கொள்ளுமாறு அனைவருக்கும் அழைப்பு விடுக்கின்றேன் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார். இந்தத்தேர்தல் அடுத்த வருடம் ஆரம்ப காலப்பகுதியில் நடைபெறும் என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அங்கு உறையாற்றுகையில் ‘ பொதுமக்களுக்கு பல நன்மைகளை பெற்றுக்கொடுக்கும் பொழுது சிலர் அதனை சகித்துக்கொள்ள முடியாதுள்ளனர். நாட்டில் வறுமை ஒழிப்பு மற்றும் போதைப்பொருள் பாவனை ஒழிப்பு போன்ற திட்டங்கள் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன சர்வதேச ரீதியில் இலங்கை தொடர்;பில் நல்லெண்ணத்தை ஏற்படுத்த முடிந்துள்ளது’ என்றும் அவர் தெரிவித்தார்.
சிரீலங்கா சுதந்திரக் கட்சி குறித்து கருத்து தெரிவித்த ஜனாதிபதி சிரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஸ்தாபகரான அமரர் எஸ்.டப்ளியூ.ஆர். டி .பண்டாரநாயக்க, ஐக்கிய தேசிய கட்சியை உடைத்து கொண்டு சிரீலங்கா சுதந்திரக் கட்சியை ஆரம்பித்தார் என சிலர் கூறுகின்றனர். இதில் எனக்கு உடன்பாடு இல்லை. சிங்கள மகா சபையை சேர்ந்த சிலருடன் இணைந்தே அவர் சுதந்திரக் கட்சியை ஆரம்பித்தார். குறுகிய காலம் நாட்டை நிருவகித்த தலைவர், பண்டாரநாயக்க நெருக்கடிகள் பலவற்றை எதிர்கொண்டார் அவற்றை துணச்சலுடன் எதிர்கொண்ட அரசியல் தலைவர். சிரீலங்கா சுதந்திரக் கட்சி ஜனநாயகத்தை அடிப்படையாக கொண்ட அரசியல் கட்சி என்பதால்,  தற்காலத்திற்கு தேவையான வகையில் கட்சியை வலுப்படுத்த வேண்டியது அவசியம்  என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

By

Related Post