Breaking
Sun. Jan 12th, 2025

3வது முறையாகவும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டால் வழக்குத் தொடரப்படும் என்ற அச்சம் காரணமாகவே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ உச்ச நீதிமன்றில் சட்ட விளக்கம் கோரியுள்ளார் என பிரதமர் நீதியரசர் சரத் என் சில்வா தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தலுக்கு அறிவிப்பு விடுக்க முடியுமா மற்றும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட முடியுமா என்ற கேள்விகளையே அவர் தற்போது எழுப்பியுள்ளதாகவும்.

சட்ட விளக்கம் கோரப்பட்ட இரண்டு கேள்விகளும் தனிப்பட்ட ரீதியானதே தவிர, நாட்டின் ஜனாதிபதி என்ற ரீதியில் கேட்கப்படவில்லை அத்துடன் சட்ட விளக்கம் கோரியதன் மூலம் ஜனாதிபதி அரசியல் சாசன மீறலில் ஈடுபட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட முடியமா என ஜனாதிபதி உச்ச நீதிமன்றில் விளக்கம் கோருவதன் மூலம், அவர் போட்டியிடத் தகுதியற்றவர் என்பது நிரூபணமாகியுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related Post