Breaking
Mon. Dec 23rd, 2024

இர்ஷாத் றஹ்மத்துல்லா

எதிர்வரும் 9 ஆம் திதகி மலரப்போகும் மைத்திரிபால சிறிசேன அவர்களின் ஆட்சியில் இந்த நாட்டு மக்கள் அளப்றிய நன்மைகளை அடையவுள்ளதாக தெரிவித்துள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தேசிய தலைவர் இந்த நாட்டில நல்லாட்சியினை தோற்றுவிக்கும் வேலைத்திட்டத்திற்காக நிபந்தனைகளற்ற ஆதரவினை அவருக்கு எமது கட்சி வழங்க முன்வந்ததாகவும் கூறினார்.

வவுனியா வைரவபுளியங்குளம் விளையாட்டு மைதனத்தில் அணி திரண்ட பல்லாயிரக்கணக்கான மக்கள் மத்தியில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
பொது வேட்பாளர் மைத்திரிபல சிறிசேன அவர்களின் வெற்றியில் வடக்கு மக்களின் பங்களிப்பை பெற்றுக் கொடுக்கும் வகையில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஏற்பாடு செய்திருந்த பிரமாண்டமான கூட்டத்தில் தமிழ்,முஸ்லிம்,சிஙகள மக்கள் கலந்து கொண்டனர்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய தேசிய தலைவர் றிசாத் பதியுதீன் கூறியதாவது-
இந்த நாடடின் சிறுபான்மை சமூகங்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டுவரும் அடக்குமுறைகளை பார்த்துக் கொண்டு பதவியில் இருக்க முடியாது..

rr1.jpg4_ rr1.jpg3_ rr1.jpg2_.jpg5_ rr1.jpg2_ rr1

எவரையும் அடிமைப்படுத்தி அவர்களை அடக்கி,ஒடுக்கி வைப்பது என்பது எந்த வித்தில் நியாயமாகும்.இன்றைய ஜனாதிபதியாக இருக்கும் மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக வருவதற்கு தம்மை முழுமையாக செயற்படுத்தி இந்த அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி என்பதை அவர் மறந்து செயற்பட ஆரம்பித்துவிட்டார்.இன்று எம்மை துரோகிகள் என்றும் வேறு விரும்பப்படாத வார்த்தைகளை கொண்டு மேடைகளில் ஏசி வருகின்றார்.2005 ஆம் ஆண்டும்,2010 ஆம் ஆண்டும் இவர் வெற்றி பெற நபம் வழங்கிய ஆதரவு அளப்பறியது.அப்படியெனில் எமது மக்களின் வாக்குகளும் இவரது வெற்றியில் இருக்கின்ற போது,இந்தமக்களுக்கு எதிராக செயற்படும் ஒரு வரை நாம் ஏற்றுக்கொள்ளமுடியும் உஎன கேள்வியும் எழுப்பினார்.

வன்னி மாவட்ட மக்களை இன்று சிலர் அச்சுறுத்தி வாக்குகளை மஹிந்த ராஜபக்ஷவுக்கு வழங்குமாறு விரட்டுகின்றனர்.இந்த நாட்டில் இராணுவம் செய்த சேவைகளை நாம் மறக்கவில்லை,மிகவும் மறியாதையுடன் அவற்றை நினைவ கூறுகின்றோம்.ஆனால் அவர் ஜனநாயக மக்கள் வாக்களிப்பில்இடையூறு செய்வதை அங்கீகரிக்க முடியாது.இரானுவத்தினருக்கு அரசியல் செய்யும் உரமை இல்லை என்றும் கூறினார்.

Related Post