Breaking
Tue. Dec 24th, 2024

சற்றுமுன்னர் நேபாளில் மற்றுமொரு 6.7 ரிக்டர் சக்தி   வாய்த்த நில நடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளதாக தெரிய வருகிறது..

நேபாளின் காத்மாண்டு நகரில் இருந்து சில கிலோமீட்டர் துரத்தில் அமைந்துள்ள பிரதேசத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தின் சேத விபரம் இதுவரை தெரியவில்லை.

நேற்றைய  நிலநடுக்கத்தைத் தொடர்ந்து ஆப்டர் ஷாக்குகள் (After Shock) ஏற்பட்டு வருகின்றன. மிதமான அளவில் அவை இருந்து வந்த நிலையில் இன்று சக்தி வாய்ந்த ஆப்டர்ஷாக் ஏற்பட்டது.

இந் நில அதிர்வானது நேபாளத்தில் ரிக்டரில் 6.7 அலகுகளாக பதிவானது. இந்நடுக்கமானது நேபாளத்திலிருந்து 17 கிலோமீட்டரில் கோதாரி என்ற இடத்தில் மையம் கொண்டதாக இருந்தது.

மேலும், இந்திய வடமாநிலங்களான டெல்லி, கவுகாத்தி, பாட்னா, அலகாபாத், கொல்கத்தா, புவனேஷ்வர், பீகார், உத்தர பிரதேசத்திலும் கட்டிடங்கள் அதிர்ந்த காரணத்தினால் மக்கள் பீதியில் ஆழ்ந்துள்ளனர்.

டெல்லி மெட்ரோ ரயில் சேவை மீண்டும் நிறுத்தப்பட்டுள்ளது. பூட்டான் தலைநகர் திம்புவிலும் நிலநடுக்கம் உணரப்பட்டதால் அங்கும் பதட்டம் நிலவுகிறது.

Related Post