Breaking
Sat. Jan 11th, 2025
இந்த ஆண்டு இறுதிக்குள் வாட்ஸ்அப் நிறுவனம் தனது இலவச வாய்ஸ் கால் சேவையை விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது. அதன்படி வாட்ஸ்அப்பின் இந்த இலவச வாய்ஸ் கால் சேவை 2015ல் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி வாய்ஸ் கால் சேவை சரியாக தொடங்குவதில் கால தாமதம் ஏற்பட்டுள்ளது. மேலும் புதிய அம்சங்களை கொண்ட வாட்ஸ்அப் வெளியிடுவதில் தொழில்நுட்ப பிரச்சனை உள்ளதால் அதனை சரிசெய்வதற்கான பணிகள் நடந்து வருவதாக தெரிவித்துள்ளது. இத்தகைய பிரபலமான வாட்ஸ்அப் 600 மில்லியன் பயனாளர்களை கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
குறிப்பிட்ட செல்போன்களில் சில குறைபாடு இருப்பதால் அதனை சரிசெய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. புதிய அம்சங்களை கொண்ட  வாட்ஸ் அப் வெர்சன்  4.5.5 என்ற பதிப்பில் வெளியாக உள்ளது. ஏப்ரல் மாதத்தில் இத்தகைய சேவையை வாடிக்கையாளர்கள் பெற முடியும் என்று கூறப்படுகிறது. இந்த சேவை வரும் பட்சத்தில், செல்போன் சேவை அளிக்கும் நிறுவனங்களின் வருவாய் பாதிக்கும் என்று கூறப்படுகிறது. ஏற்கனவே சீனாவின் விசாட், கொரியாவின் காகோடாக், இஸ்ரேலின் வைபர் ஆகிய நிறுவனங்கள் வாய்ஸ் கால் சேவையை அளிப்பதால் அந்தந்த நாடுகளில் உள்ள செல்போன் சேவை நிறுவனங்களின் வருமானம் வெகுவாகக் குறைந்துள்ளது.

Related Post