இந்த மாதம் முதல் அடுத்துவரும் 6 மாத காலத்துக்குள் இலங்கைக்கு ஜப்பான் வாகனங்களை இறக்குமதி செய்வதை நிறுத்தி வைத்துள்ளதாக இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் மற்றும் ஸ்ரீ லங்கா வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் என்பன இணைந்து அறிவிப்புச் செய்துள்ளன.
தொடர்ந்தேர்ச்சியாக வாகனத்தின் விலையில் ஏற்பட்டுள்ள தளம்பல் நிலை வாகன இறக்குமதியாளர்களுக்கு பெரும் பிரச்சினையாக காணப்படுவதாகவும் இதனாலேயே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அச்சங்கத்தின் தலைவர் சம்பத் மெரிஞ்சிகே தெரிவித்துள்ளார்.
தற்பொழுதுள்ள நிலையில், ஜப்பானிலிருந்து இறக்குமதி செய்யப்படும் சிறிய ரக “ஹைப்ரிட்” வாகனமொன்றுக்கு மூன்று லட்சம் முதல் ஐந்து லட்சம் வரையில் மேலதிக வரி செலுத்தப்பட வேண்டியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.