குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம்,மோசடிகளை தடுக்கும் முகமாக அடுத்தஆண்டின் தொடக்கத்தில் மின்- கடவுச்சீட்டுக்களை வெளியிட நடவடிக்கைகள்முன்னெடுக்க வேண்டும் என வடமேல் அபிவிருத்தி மற்றும்கலாச்சார அலுவல்கள் அமைச்சர் எஸ்.பி நாவின்ன தெரிவித்துள்ளார்.
இணைய கடவுச்சீட்டு விண்ணப்ப படிவங்களை நிரப்புதல் மற்றும் விசாஸ்டிக்கர்களுக்கான அறிமுகப்படுத்தல் நிகழ்வின் போது இதனை நேற்றுதெரிவித்துள்ளார்.
இந்த நிகழ்வானது குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள கேட்போர் கூடத்தில்நேற்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின்மேற்பார்வையின் கீழ் இந்த புதிய தொழில்நுட்பங்கள் அறிமுகப்படுத்தல் நிகழ்வுநடத்தப்பட்டதாக நாவின்ன தெரிவித்துள்ளார்.
இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக குடிவரவு மற்றும் குடியகல்வுத்திணைக்கள கட்டிடம் தற்போது இருந்த இடத்தில் இருந்து இரண்டு மாதங்களில்மாற்றுவதற்கான திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டுவருவதாகவும் தெரிவித்தார்.
உள்கட்டமைப்பு மற்றும் தொழில்நுட்ப வசதிகள் காரணமாக 2015ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில்2016ல் ரூபா 15 ஆயிரம் மில்லியன் அளவில் எதிர்ப்பார்க்கப்படுவதாக அமைச்சர்கூறினார்.
நவீன தொழிநுட்ப வசதிகளுடன் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட இயந்திரத்தில்,ரப்பர் முத்திரைகள் ஒட்டுதலுக்கு பதிலாக வாசிக்கும் வகையில் விசா ஏற்பாடுசெய்திருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இதன் மூலம் விசா மாற்றம்,தேசிய பாதுகாப்பு அச்சுறுத்தல்கள்,விசா மோசடிகள்போன்றவற்றில் இருந்து பாதுகாத்துக் கொள்ளலாம் எனவும்,விண்ணப்பதாரர்கள்தங்களின் நேரங்களை சேகரித்துக் கொள்ளலாம் எனவும்கூறியுள்ளார்.
இந் நிகழ்வில் உள்நாட்டு அலுவல்கள், வடமேல் அபிவிருத்தி மற்றும் கலாசாரஅலுவல்கள் அமைச்சின் செயலாளர் டி.சுவர்ணபால மற்றும் குடிவரவு மற்றும்குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் நிஹால் ரணசிங்கஆகியோரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.