பாராளுமன்ற குழுக்களின்பிரதித் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் எம்.பி அவர்களின் தந்தையார் அமிர்தநாதனின் இழப்பு ஈடு செய்யமுடியாதது எனவும் மன்னார் மாவட்டத்தில் தமிழ் – முஸ்லிம்நல்லுறவை வளர்ப்பதில் அவர் பெரும் பங்ககாற்றியவர் எனவும்அமைச்சர் றிஷாத் பதியுதீன் விடுத்துள்ள அனுதாபச் செய்தியில்தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறியுள்ளதாவது,
மன்னார் விடத்தல்தீவை பிறப்பிடமாகக் கொண்டஅமிர்தநாதன் அடைக்கலநாதன் பெயர்பெற்ற சித்தவைத்தியராக பணிபுரிந்தவர். குறிப்பாக வாத நோய்களைக்குணப்படுத்துவதில் வல்லவராக அவர் விளங்கினார். பாரம்பரியசித்த வைத்திய குடும்பத்தில் பிறந்த அன்னாரின் தந்தையார்அமிர்தநாதனும் புகழ் பெற்ற சித்த வைத்தியராக விளங்கிவைத்தியப் பணிகளை மேற் கொண்டதாக நாம் அறிகின்றோம்.
மன்னார் மாவட்டத்தின் இன ஒற்றுமைக்காக காலம் சென்றஅமிர்தநாதன் பாடுபட்டு வந்திருக்கின்றார். குறிப்பாக தான்பிறந்து வாழ்ந்த விடத்தல்த்தீவுக் கிராமத்தில் சகோதரமுஸ்லிம்களுடனும், இந்துக்களுடனும் மிகவும் அன்பாகவும், நேயமாகவும் பழகியவர். அவர்களது இன்ப துன்பங்களில்எப்போதும் பங்கேற்கக் கூடியவராக இருந்தவர்.
யுத்த சூழ்நிலைகளால் விடத்தல்த்தீவு மக்கள்ஒட்டுமொத்தமாக ஊரைவிட்டு வெளியேறியபோது காலம்சென்ற அமிர்தநாதனும் குடும்பத்தாருடன் இடம்பெயர்ந்துவவுனியாவிலும் பின்னர் கொழும்பிலும் வாழ்ந்தார் அதன்பின்மீண்டும் மன்னார் தோட்டவெளியில் விடத்தல்தீவு மக்களுடன்இணைந்து வாழ்ந்தார். வயதான காலத்திலும் அவர் தனதுவைத்திய தொழிலைக் கைவிடாது நோய்களை குணப்படுத்திவந்தமை சிறப்பானது.
அன்னாரின் இழப்பால் துயருறும் அவரது குடும்பத்தாருக்குஎனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவிக்கின்றேன்.