Breaking
Mon. Dec 23rd, 2024

– அபு அலா –

அம்பாறை – அட்டாளைச்சேனை பிரதேச மீனவர்களுக்கு கடந்த வாரமாக மிக அதிகளவிலான பாரை மீன்கள் சிக்கி வருவதாக மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.

அட்டாளைச்சேனை கோணாவத்தைப் பகுதியிலுள்ள றஹ்மான் ராஜா கரைவலை மீனச்சங்க மீனவர்களுக்குச் சொந்தமான வலையிலேயே நேற்று வியாழக்கிழமை சுமார் 2500 பாரை மீன்கள் சிக்கியதாகவும், சுமார் இந்த மீன்கள் சுமார் 40 இலட்சம் ரூபாய் பெறுமதியுடையவை எனவும் மீனவர்கள் தெரிவித்தனர்.

தற்போது அம்பாறை, அட்டாளைச்சேனை பிரதேசத்தில் இந்த மீன்களின் விலை குறைவடைந்து காணப்படுவதுடன் ஒரு கிலோ மீனின் விலை 300 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்டும் வருகின்றன.

அம்பாறை மாவட்ட கரையோரப் பகுதிகளில் கடந்த சில வாரங்களாக, அதிகளவு மீன்கள் பிடிபட்டு வருகின்றமையும் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் இவ்வாறு அதிகளவிலான பாரை மீன்கள் பிடிபட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

By

Related Post