Breaking
Mon. Dec 23rd, 2024

-ஊடகப்பிரிவு-

அகில இலங்கை மக்கள் காங்கிரஸு க்கு கிழக்கில் அதிகரித்து வரும் மக்கள் அலை காரணமாகவே, அட்டாளைச்சேனைக்கு எம்.பி. பதவியை கொடுக்க வேண்டிய கட்டாய நிலை  மு.கா தலைவர்  ஹக்கீமுக்கு ஏற்பட்டது. இதற்காகவேண்டி அகில இலங்கை மக்கள் காங்கிரஸுக்கும் அதன் தலைவர் ரிஷாத் பதியுதீனுக்கும் அட்டாளைச்சேனை மக்கள் நன்றி கூறவேண்டுமென கட்சி விடுத்துள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

உள்ளுராட்சி தேர்தல் பிரசாரம் சூடுப்பிடித்து வரும் நிலையில் மு.கா.வின் கோட்டைகளில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதுடன், மக்கள் அலை அலையாக மக்கள் காங்கிரஸை ஆதரிக்க ஆரம்பித்துள்ளனர். இதனால் கிழக்கின் பெரும்பாலான சபைகளை கைப்பற்றுவதற்கான வாய்ப்புக்களையும் மக்கள் காங்கிரஸ் கொண்டுள்ளது.

இந்த மக்கள் அலையை கண்டு பீதியடைந்துள்ள மு.கா. தலைவர் ரவூப் ஹக்கீம் அட்டாளைச் சேனையையாவது காப்பாற்றிக்கொள்ள வேண்டும் என்ற நோக்கில் எம்.பி. பதவியை நஸீருக்கு வழங்கியுள்ளார். அட்டாளைச்சேனை மக்களை ஏமாற்றும் ஹக்கீம் யுக்தி இதுவென்றும் அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Post