Breaking
Sun. Jan 5th, 2025

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் புதல்வர்களான யோசித ராஜபக்ச மற்றும் ரோகித ராஜபக்ச ஆகியோர், கடற்படை மற்றும் இராணுவ ரக்பி அணிகளின் தலைவர் பதவிகளில் இருந்து நீக்கப்படவுள்ளனர்.

மஹிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில், அவரது இரண்டாவது மகன் யோசித ராஜபக்ச சிறிலங்கா கடற்படையின் ரக்பி அணியின் தலைவராகவும், இளைய மகன் ரோகித ராஜபக்ச சிறிலங்கா இராணுவ ரக்பி அணியின் தலைவராகவும் நியமிக்கப்பட்டனர்.

தற்போது இவர்களை இந்தப் பதவிகளில் இருந்து நீக்குமாறு உயர்மட்டத்தில் இருந்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

Related Post