அணு ஆயுதப்பரவல் தடை உடன்படிக்கை தொடர்பான ஐ.நா. சபையின் வரைவு தீர்மானம் கடந்த 1996-ம் ஆண்டு ஏற்றுக் கொள்ளப்பட்டது.
இந்த அணு ஆயுத பரவல் தடை உடன்படிக்கையில் 183 நாடுகள் ஒப்புதல் அளித்துள்ளது. ரஷ்யா, பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்து உள்ளிட்ட 164 நாடுகள் உடன்படிக்கையை ஏற்றுக் கொண்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின் அணுசக்தி உடன்படிக்கையை ஏற்றுக் கொள்ள தற்போது இஸ்ரேல் மக்கள் தயாராக இல்லை என்று அந்நாட்டு பிரதமர் பெஞ்சமின் நெடான்யாஹூ தெரிவித்துள்ளார்.
இது குறித்து நெடான்யாஹூ கூறியுள்ளதாவது:-
இந்த உடன்படிக்கைக்கு இஸ்ரேல் ஆதரவு தெரிவிக்கிறது. அதனால் தான் உடன்படிக்கையில் கையெழுத்திட்டுள்ளது. உள்நாட்டு சூழ்நிலை மற்றும் சரியா நேரத்தை பொறுத்து உடன்படிக்கையை ஏற்றுக்கொள்ள வைப்பது அமையும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.