Breaking
Mon. Dec 23rd, 2024

ஒற்­றை­யாட்சி மற்றும் சமஷ்டி என்று வெறும் வார்த்­தை­களை பற்றிப் பிடித்­துக்­கொண்­டி­ருக்­காமல் மக்­களின் அடிப்­படை பிரச்­சி­னை­களை தீர்க்கும் வகை­யிலும் தேசியஒற்­று­மையை ஏற்­ப­டுத்தும் வகை­யி­லு­மான அர­சி­ய­ல­மைப்பு ஒன்­றுக்கே செல்­ல­வேண்­டி­யுள்­ளது என்று நீதி­ய­மைச்சர் விஜே­தாச ராஜ­பக்ஷ தெரி­வித்தார்.

மேலும் ஒற்­றை­யாட்சி முறை­மையின் ஊடாக முழு­மை­யான அதி­காரப் பகிர்­வுக்கு செல்­வ­தற்கு எவ்­வி­த­மான தடை­களும் இல்லை. ஆனால் எவ்­வா­றான முறை­மைக்கு செல்­ல­வேண்டும் என்­ப­தனை மக்­களே தீர்­மா­னிக்­க­வேண்டும் என்றும் அவர் குறிப்­பிட்டார்.

ஒற்­றை­யாட்சி முறை­மையில் மாற்றம் ஏற்­ப­டாது என்று தேசிய அர­சாங்கம் தெரி­வித்­து­வ­ரு­கின்ற நிலையில் ஐக்­கிய இலங்­கைக்­குள்­ளேயே தீர்வு காண முடியும் என தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு கூறி வரு­கின்­றது. இந் நிலையில் இது தொடர்பில் வின­வி­ய­போது நீதி­ய­மைச்சர் விஜே­தாச ராஜ­பக்ஷ மேற்­கண்­ட­வாறு கூறினார்.

அவர் இது தொடர்பில் மேலும் கூறு­கையில்,

புதிய அர­சி­ய­ல­மைப்பு எவ்­வாறு அமைய வேண்டும் என்­பதை நாம் தீர்­மா­னிக்­க­மு­டி­யாது. அது இந்த நாட்டு மக்­க­ளினால் தீர்­மா­னிக்­கப்­ப­ட­வேண்­டிய விட­ய­மாகும். தனிப்­பட்ட முறையில் என்­னிடம் சில நிலைப்­பா­டுகள் உள்­ளன. ஆனால் இம்­முறை அர­சி­ய­ல­மைப்பை உரு­வாக்கும் இந்த செயற்­பாட்டில் நாங்கள் எமது கருத்­துக்­களை திணிப்­ப­தை­வி­டுத்து பொது­மக்­களின் கருத்­துக்­களைப் பெற்றே நாட்­டுக்குத் தேவை­யான புதிய அர­சி­ய­ல­மைப்பை உரு­வாக்­கு­வ­தற்கு திட்­ட­மிட்­டி­ருக்­கின்றோம்.

அதற்­கான வேலைத்­திட்­டங்­க­ளையும் தற்­போது நாங்கள் ஆரம்­பித்­துள்ளோம். தற்­போது ஒற்­றை­யாட்­சியா? ஐக்­கிய இலங்­கையா? என கேள்­விகள் எழுப்­பப்­பட்டு வரு­கின்­றன. ஆனால் இந்த இடத்தில் முக்­கி­ய­மான ஒரு­வி­ட­யத்தை குறிப்­பிட வேண்­டி­யுள்­ளது.

அதா­வது ஒற்­றை­யாட்சி சமஷ்டி என்று வெறும் வார்த்­தை­களில் தொங்­கிக்­கொண்­டி­ருக்­காமல் மக்­களின் அடிப்­படை பிரச்­சி­னை­களை தீர்க்கும் வகை­யிலும் தேசிய ஒற்­று­மையை ஏற்­ப­டுத்தும் வகை­யி­லு­மான அர­சி­ய­ல­மைப்பு ஒன்­றுக்கே செல்­ல­வேண்­டி­யுள்­ளது. குறிப்­பாக வெறும் வார்த்­தை­களில் நாம் தொங்­கிக்­கொண்­டி­ருக்க முடி­யாது. மாறாக செயற்­பாட்டு ரீதியில் மக்­களின் பிரச்­சி­னை­களை தீர்ப்­ப­தற்­கான புதிய அர­சி­ய­ல­மைப்பு அமைய வேண்டும்.

ஒற்­றை­யாட்சி முறை­மையின் ஊடாக முழு­மை­யான அதி­காரப் பகிர்­வுக்கு செல்­வ­தற்கு எவ்­வி­த­மான தடை­களும் இல்லை. ஆனால் எவ்வாறான முறைமைக்கு செல்லவேண்டும் என்பதனை மக்களே தீர்மானிக்கவேண்டும். வெறுமனே நாங்களே எதனையும் தீர்மானித்து அரசியலமைப்பை முன்னெடுக்க முடியாது. மாறாக மக்களின் கருத்துக்களைப் பெற்று மக்களின் ஆலோசனைகளுடனே பொதுவான அரசியலமைப்பை உருவாக்க வேண்டியுள்ளது என்றார்.

By

Related Post