உலகிலேயே அதிகமாக செல்வத்தை வைத்திருப்பவர்கள் ஆசியர்கள் எனகுறிப்பிடப்பட்டுள்ளது.
Capgemini என்ற நிதி நிறுவனம் மூலம் வெளியிடப்பட்ட அறிக்கையிலேயே இந்தவிடயம் குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி 2015ஆம் ஆண்டின் ஆய்வின்படி ஆசிய செல்வந்தர்களின் பணமானது 10 வீதத்தால் அதிகரித்துள்ளதாகவும் குறித்த நிறுவனத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் இந்தக் காலப்பகுதிகளில் வட அமெரிக்காவில் உள்ள செல்வந்தர்களின்பணமானது 16.6 ட்ரில்லியன் அமெரிக்க டொலராகவும், ஆசிய செல்வந்தர்களின் பணம் 17.4 ட்ரில்லியனாகவும் அதிகரித்துள்ளதாகவும் குறித்த அறிக்கையில்தெரிவிக்கப்பட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.
இதேவேளை கடந்த 2014 ஆம் ஆண்டு அதிகளவான ஆசியர்கள் செல்வந்தர்களாகபதிவாகியிருப்பதாகவும்,கடந்த வருடத்திற்கான ஆசிய செல்வந்தர்கள் 5.1 வீதம்பதிவாகியுள்ள இதேவேளை, இதில் ஜப்பானியர்கள் அதிகமாக பதிவாகியுள்ளதாகவும்குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன், இந்த அறிக்கைகளின் படி அதிகமான ஆசியர்கள் செல்வந்தர்களாக உள்வாங்கப்பட்டிருப்பது நிதி சேவை, தொழிநுட்பம், சுகாதார துறைகளில் எனவும் அந்த அறிக்கை குறிப்பிட்டுள்ளது.