Breaking
Sat. Jan 11th, 2025

நாட்டின் அதிகாரங்கள் அனைத்தும் ஒரு குடும்பத்தின் கையில் குவிந்திருப்பதாக எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேன குற்றஞ்சாட்டியுள்ளார்.

நாட்டில் சட்டம் சீர்குழைந்துள்ளது. யுத்த வெற்றியின் பின்னர் இந்த அரசு பிழையான வழியில் செல்கின்றது. குறிப்பாகஅரசியலமைப்பின் 18ஆவது திருத்தம் பாரியதொரு தவறாகும்

1994ஆம் ஆண்டுக்குப் பின்னர் யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவர சந்திரிகா அம்மையார் பாரிய முயற்சிகளை முன்னெடுத்தார். ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கு கொள்கை மற்றும் தூரநோக்கு இருக்கிறது.

1974 – 1994 வரை ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க, கண்ணீர் சிந்தி கட்சியைப் பாதுகாத்தார் போதைப்பொருள் மற்றும் புகைத்தலுக்கு எதிரான நடவடிக்கைகளில் இடையுறுகளைச் தாம் சந்தித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

நாட்டுக்குள் சகலதும் மறைக்கப்பட்டு சுதந்திர ஊடகம் அடிபணியச் செய்யப்பட்டுள்ளது. இந்த நாட்டில் சுதந்திர ஊடகத்துக்கு இடமில்லை தாம் ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றால் பொலிஸ், நீதிமன்றம் ஆகியன பக்கச்சார்பின்றி செயற்படும் என்பதை உறுதிப்படுத்துவேன்.

சகல துறைகளையும் பொருளாதார ரீதியில் கட்டியெழுப்புவேன். நாட்டில் தற்போது நிர்வாகம் ஒரு குடும்பத்தின் கையில் உள்ளது. அரசியலமைப்பின் 17ஆவது திருத்தம் நடைமுறைப்படுத்தப்படும்.அத்துடன் அரசியலமைப்பின் 18ஆவது திருத்தம் ஒழிக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related Post