Breaking
Fri. Nov 15th, 2024

அரசியல்வாதிகள் தாம் அதிகாரத்துக்கு வருவதற்காக  மக்களின் வறுமையைத் தவறாகப் பயன் படுத்துவதைத் தவிர்க்க வேண்டும் என்று தெரிவித்தார் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன.

பொலனறுவை இரகாந்தகற்று வெவ வித்தியாலயத்தின் புதிய தொழில்நுட்பக் கூடத்தைத் திறந்து வைத்து உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மக்களின் வறுமையை அரசியல் வாதிகள் தாம் அதிகாரத்துக்கு வருவதற்குப் பயன்படுத்துகின்றனர். தேர்தல் வரும்போது அதி காரத்தில் உள்ள அரசியல்வாதி கள் எவராக இருந்தாலும் அரச நிதி வளங்களைப் பயன்படுத்து கின்றனர். குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு கூடுதல் வரப்பிரசாதங்களை வழங்கு கின்றனர் என்றும் அவர் சுட்டிக் காடியுள்ளார்.

அங்கு அவர் மேலும் தெரிவித்த தாவது:நாட்டின் பிரச்சினை மற்றும் அபி விருத்திக்கு இவ்வாறான விடயங்கள் ஒருபோதும் தீர்வாக அமையாது. இவை தற்காலிக அரசியல் நோக்கங்களுக்காகவே செயற்படுத்தப்படுகின்றன. இவற்றை தவிர்த்து நாட்டின் நீண்டகால அபிவிருத்தி உள்ளிட்ட செயற்பாடுகளில் கவனம்செலுத்த வேண்டும்  – என்றார்.

By

Related Post