Breaking
Sun. Dec 22nd, 2024

– அபூ அஸ்ஜத் –

ஏனைய நாட்டு அரசங்க நிறுவனங்களை போன்று எமது நாட்டில் செயன் திறன்மிக்க ஊழியர்கள் உருவாகின்ற போது இலாபம் ஈட்டு நிறுவனங்கள் நஷ்டத்தினை நோக்கி நகராது என தெரிவித்துள்ள கைத்தொழில்,வணிகத் துறை அமைச்சர் றிசாத் பதியுதீன் அதிகாரிகள் தமது பிரச்சினைகளையும்,ஆலோசனைகளையும் தெரிவிக்கும் வகையில் தமது அமைச்சின் கீழ் உள்ள அனைத்து நிறுவனங்களிலும் முறைப்பாட்டு பெட்டியொன்றினை ஏற்படுத்தவுள்ளதாகவும் கூறினார்.

அரசாங்க வணிக கூட்டுத்தாபனத்தில் பணியாற்றிய தற்காலிக ஊழியர்கள் ஒரு தொகுதியினரை நிரந்தர சேவையில் இனைத்து கொள்ளும் வகையில் அவர்களுக்கான நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வு அமைச்சின் கேட்போர் கூடத்தில் இடம் பெற்ற போது அந்த நிகழ்வில் கலந்து உரையாற்றும் போது அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.

மேலும் அமைச்சர் றிசாத் பதியுதீன் தமதுரையில் –
இன்று நியமனத்தை பெறும் நீங்கள் பொறுப்புள்ளவர்கள்.அரசாங்க லாபமீட்டும் நிறுவனமொன்றில் நிரந்தர சேவையில் இணைததுக்கொள்ளப்பட்டுள்ளீர்கள்.இதன் மூலம் நீங்கள் நிறுவனத்தின் அபிவிருத்திக்கு பாடுபட வேண்டும்.

நிறங்களையும்,கட்சிகளின் கோஷங்களையும்,கட்சி பணிகளையும் செய்யும் இடங்களாக இந்த நிறுவனத்தை மாற்ற முயற்சிக்காதீர்கள்.நஷ்டத்தில் இயங்கும் நிறுவனங்களை மீள கட்டியெழுப்ப நாம் திட்டங்களை வகுத்து அதனை நடைமுறைக்கு கொண்டுவந்துள்ளோம்.இவ்வாறான நிலைவயில் தொழிற்சங்க நடவடிக்கைகள் மூலம் மட்டும் உங்களது கோறிக்கைகளை அடைந்து கொள்ள முடியும் என்ற எண்ணத்தில் இருந்து விடுபட்டு நிறுவனத்தின் வளர்ச்சி மூலம் உங்களது நியாயமான கோறிக்கைகளை பெற்றுக்கொள்ள முடியும்,
எமது நிறுவனத்தின் நிலையினை கவனத்திற் கொண்டு முதற்கட்டமாக ஒரு தொகுதியினருக்கு இன்றைய தினம் நியமனங்கள் வழங்கப்படவுள்ளது.

குறிப்பாக நிறுவனத்தில் பணியாற்றும் பணிப்பாளர் முதல் சாதாரண ஊழியர்கள் வரை இந்த நிறுவனத்தின் வளர்ச்சி தொடர்பிலும்,இடம் பெறும் ஊழல்கள் தொடர்பில் எனது கவனத்திற்கு கொண்டு வரமுடியும்,அதற்காக மக்கள் சந்திப்பு தினங்களை பயன்படுத்தி அதனை தெரிவிக்க முடியும்.

சிலர் நியமனங்கள பெற்றுவிட்டோம் இதற்கு மேல் என்ன செய்ய முடியும் என்று சிந்திக்கின்றனர்.அது தவறானாது இந்த செயற்பாடுகளை கண்கானிக்க விஷேட அதிகாரிகளை நியமிக்கவுள்ளேன்.நஷ்டம் ஈட்டும் நிறுவனமாக இதனை மாற்ற நினைத்தால் அது தொடர்பில் உரிய நடவடிக்கையினை மேற்கொள்ள நேரிடும்.

இன்றைய உலக வளர்ச்சிக்கேட்ப நாம் பணியாற்றும் நிறுவனங்களின் பொட்டித் தன்மையினை ஏற்படுத்த வேண்டும் அப்போது நீங்களும் மேலதிக போனஸ் கொடுப்பனவுகளை பெறமுடியும் என்றும் அமைச்சர் றிசாத் பதியுதீன் கூறினார்.

By

Related Post