Breaking
Sun. Jan 12th, 2025
பொத்துவில் கல்விக் கோட்டப் பாடசாலை அதிபர் சங்கத்தின் ஏற்பாட்டில் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.எம்.முஷாரபை பாராட்டி, கௌரவிக்கும் நிகழ்வு, பொத்துவில் ஹேங்லூவ்ஸ் ஹோட்டலில் (05) இடம்பெற்றது.
அதிபர் சங்கத்தின் தலைவரும் பொத்துவில் மத்திய கல்லூரியின் அதிபருமாகிய ஜனாப்.கே.ஹம்ஸாவின் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில், பொத்துவில் கோட்டக் கல்விப் பணிப்பாளர் எம்.ஏ.புஹாரியினால் பாராளுமன்ற உறுப்பினருக்கு பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டதுடன், வாழ்த்துரையும் நிகழ்த்தப்பட்டது.
அத்தோடு, அதிபர் சங்கதத்தினால் வாழ்த்துப்பா பாடப்பட்டு, அது நினைவுச் சின்னமாகவும் வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் பொத்துவில் கல்விக் கோட்டத்தின் பாடசாலை அதிபர்கள் கலந்துசிறப்பித்தனர்.

Related Post