Breaking
Wed. Nov 20th, 2024

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவளிப்பதா, இல்லையா என்பது தொடர்பில் நாளைய தினம் ஆராயவுள்ளதாக சிரேஷ்ட அமைச்சர் திஸ்ஸ வித்தாரண தெரிவித்துள்ளார்.

நிறைவேற்று அதிகார முறையை ரத்துச் செய்யுமாறு தனது கட்சி உள்ளிட்ட இடதுசாரிக் கட்சிகள் தொடர்ந்தும் ஜனாதிபதியை வலியுறுத்தி வருகின்ற போதிலும், ஜனாதிபதி அது தொடர்பில் கரிசனை காட்டவில்லை.

இந்நிலையில் தொடர்ந்தும் அரசுக்கு ஆதரவளிப்பதற்கும், ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவளிப்பதற்கும் சமசமாஜக் கட்சி சில நிபந்தனைகளை முன்வைக்கும் என்று கூறப்படுகின்றது.

17வது திருத்தச் சட்டத்தை நடைமுறைக்கு கொண்டுவந்து சுயாதீன ஆணைக்குழுக்களை மீள உருவாக்கல், தேர்தல் முறையில் மாற்றம், நிறைவேற்று அதிகார ஜனாதிபதி பதவியை ரத்துச்செய்தல் என்பன அந்த நிபந்தனைகளாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

Related Post