Breaking
Sat. Nov 2nd, 2024

வசந்தம் தொலைக்காட்சியில்  நேற்று 13 ஆம் திகதி இரவு இடம்பெற்ற அதிர்வு அரசியல் நேரடி நிகழ்ச்சியில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரிஷாத் பதியுதீன் ஊடகவியலாளர்களால் வினவப்பட்ட கேள்விகளுக்கு ஆத்திரப்படாமல் நிதானமாக யாருடைய மனதையும் புண்படுத்தாத நிலையில் கண்ணியமாகவும் கச்சிதமாகவும் பதிலளித்ததன் மூலம் ஒரு சமூகத்திற்கு தலைமை பதவியை வகிப்பதற்கு இவர் தகுதியானவர்தான் என்பதை நிருபித்துள்ளார் என அரசியல் விமர்சகர்களும் நடுநிலை மக்களும் கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.

தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் இஸ்மாயில் தொடர்பான கேள்விகளுக்கு அமைச்சர் ரிஷாத் பதியுதீன் நாடாளுமன்ற உறுப்பினரின் கெளரவத்தைப் பாதுகாத்து கண்ணியமாக பதில் வழங்கியதை அந்நிகழ்ச்சியில் காணமுடிந்தது.

நாடாளுமன்ற உறுப்பினர் இஸ்மாயில் தொடர்பில் நீங்கள் திருப்தியுடன்தான் இருக்கின்றீர்களா? என்ற ஊடகவியலாளரின் தொடரான கேள்விக்கு அமைச்சர் ரிஷாத் பதீயுதீன் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் இஸ்மாயில் அம்பாறை மாவட்ட மக்களையும் தொண்டர்களையும் தமது சேவைகள் மூலம் திருப்திபடுத்துவாரானால் நானும் அவர் மீதும் திருப்தி கொள்வேன் என்று பிடி கொடாமல் கச்சிதமாக பதிலளித்து தனது திறமையை அவ்விடத்தில் வெளிப்படுத்தினார்.

நிகழ்ச்சியில் அமைச்சர் ரவூப் ஹக்கீம் அமைச்சர் ரிஷாத் பதீயுதீனுக்கு எதிராக தேர்தல் காலத்தில் நிகழ்த்திய உரை ஒன்றின் ஒளிப்பதிவை (அந்த சந்தர்ப்பத்தில் தேவையில்லாமல்) மறு ஒளியரப்புச் செய்து இது குறித்து உங்களின் பதில் என்ன என்ற ஊடகவியலாளரின் கேள்விக்கு அமைச்சர் ரிஷாத் பதீயுதீன் ஆத்திரப்படாமல் நிதானமாக குற்றச்சாட்டை மறுத்ததுடன் மக்களிடம் வாக்கு பெறுவதற்கான யுக்திகளில் இதுவும் ஒன்று என்று தெரிவித்து முஸ்லிம் சமூகம் பிரியக்கூடாது என்ற எண்ணத்தில் நிதானமாகவும் கெளரவமாவும் தலைமைத்துவ பண்புகளுடன் இதற்கு பதிலளித்து தனது பண்பாட்டை வெளிப்படுத்தியதுடன் மக்களின் உள்ளத்தில் இடம்பிடித்தார்.

நாட்டுத் தலைவர்களான மைத்திரி, ரணில், மஹிந்த போன்றோர் நாட்டுக்காகவும் மக்களுக்காகவும் அரசியல் செய்யவில்லை.அவர்கள் தங்களுக்காகவே அரசியல் செய்து கொண்டிருக்கிறார்கள்  என்ற உண்மையை துணிச்சலுடன் பகிரங்கமாகத் தெரிவித்தார்.

இந்நேரடி நிகழ்ச்சியில் அமைச்சர் ரிஷாத் பதீயுதீன் தலைமைத்துவ பண்புகளுடன் அளித்த பதில்கள் கச்சிதமாகவும் நிதானமானதாகவும் யாருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் அமைந்திருந்தது குறித்து எல்லோராலும் பாராட்டப்படவேண்டியவாராக அவர் சமூகத்திற்கு தலைமை வகிப்பதற்கு தகுதியானவர்தான் என்பதை மீண்டும் நிருபித்துள்ளார்.

– ஏ.எல்.ஜுனைதீன்-

சிரேஷ்ட ஊடகவியலாளர்.

 

Related Post