இன்னும் வௌ்ளை வேன்கள் இருக்கலாம் என்றும் அவை முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவினால் நிர்வகிக்கப்ட்டு வந்ததாகவும் உள்நாட்டலுவல்கள் அமைச்சர் ஜோசப் மைக்கல் பெரேரா தெரிவித்தார்.
இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.
நேற்று முன்தினம் பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட மூன்று இராணுவ வீரர்கள் மற்றும் வௌ்ளை வேன் தொடர்பில் ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பியதற்கே அமைச்சர் இவ்வாறு பதிலளித்தார்.
இதுதவிர நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றில், மஹிந்த ராஜபக்ஷ மற்றும் கோட்டாபய ராஜபக்ஷ ஆகியேரை படுகொலை செய்வதற்கான திட்டமே இந்த வௌ்ளைவேன் என்ற சந்தேகம் எழுவதாக விமல் வீரவன்ச தெரிவித்திருந்தார்.
இதற்கு பதிலளித்த அமைச்சர் யாரை கொலை செய்வதற்கு அவர்கள் வந்திருந்தார்கள் என்று இதுவரை தெரியவில்லை என்றும் அது தொடர்பான விசாரணைகள் இடம்பெறுவதாகவும் தெரிவித்தார்.
எது எவ்வாறாயினும், குறித்த வேன் விடுதலைப் புலிகளுடையது என கண்டறியப்பட்டுள்ளதாகவும் அதை கோட்டாபய ராஜபக்ஷ பாதுகாப்பு செயலாளராக இருந்த காலத்தில் இராணுவத்திற்கு பெற்றுக் கொண்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
அத்துடன் அந்த வாகனம் இதுவரை பதிவு செய்யப்படாது பயன்படுத்தப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.
முன்னர் இதுபோன்ற வௌ்ளை வேன்களில் மக்களை கடத்திச் சென்ற கலாச்சாரம் ஒன்று இருந்ததாகவும், தமது அரசாங்கம் இந்த வௌ்ளை வேன் கலாச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி வைப்பதாக தெரிவித்திருந்த நிலையில் அதன் முதற்கட்டமாக மிரிஹானையில் வைத்து கைதுசெய்யப்பட்ட வௌ்ளை வேன் தொடர்பான விசாரணைகளை தொடர்ந்து முன்னெடுத்து வருவதாகவும் அமைச்சர் ஜோசப் மைக்கல் பெரேரா தெரிவித்தார். ad