Breaking
Mon. Dec 23rd, 2024
அஸ்கிரியபீட மகாநாயக்க கலகம அத்ததஸ்ஸி தேரரின் இறுதிக் கிரியைகள் எதிர்வரும் 13ம் திகதி இடம்பெறவுள்ளன. இதனையடுத்து அன்றைய தினத்தை உள்விவகார அமைச்சு தேசிய துக்க தினமாக அறிவித்துள்ளது. அன்னாரது இறுதிக் கிரியைகளை எதிர்வரும் 13ஆம் திகதி பிற்பகல் 02.30க்கு கண்டியிலுள்ள பொலிஸ் விளையாட்டரங்களில் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கலகம அத்ததஸ்ஸி தேரர் காலமாகியதை அடுத்து கொழும்பிலுள்ள சீனத்தூதரகம் தனது அனுதாபத்தை தெரிவித்துள்ளது. சீனா – ஸ்ரீலங்காவிற்கு இடையில் பௌத்த தர்மத்திற்கு கலகம  அத்ததஸ்ஸி தேரரின் பங்களிப்பு அளப்பரியதாகும் என்று சீனத்தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

By

Related Post